சரவணபனின் ஆதரவாளரின் வீடு மீது சற்று முன் தாக்குதல் - Yarl Voice சரவணபனின் ஆதரவாளரின் வீடு மீது சற்று முன் தாக்குதல் - Yarl Voice

சரவணபனின் ஆதரவாளரின் வீடு மீது சற்று முன் தாக்குதல்யாழ்.குடாநாட்டிலும் தேர்தல் வன்செயல்கள் தலைதூக்க தொடங்கியுள்ள நிலையில் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரது முக்கிய செயற்பாட்டளரது வீடு இன்றிரவு தாக்கப்பட்டுள்ளது.

முன்னாள்  நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனின் நெருங்கிய செயற்பாட்டளர் ஒருவது வீட்டின் மீது எண்மருக்கு மேற்பட்டவர்களை கொண்ட குழுவொன்றே தாக்குதல் நடத்தியுள்ளது.

தாக்குதலின் போது வீட்டிலிருந்தவர்கள் உள்ளே பதுங்கிக் கொண்டிருந்த நிலையில் தாக்குதலாளிகள் வீட்டின் கதவு மற்றும் யன்னல்களை தாக்கி உட்புக முற்பட்டுள்ளனர்.

சங்கானை தேவாலய வீதியிலுள்ள வீடொன்றின் மீதே தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் பொதுமக்கள் திரண்டதையடுத்து தாக்குதலாளிகள் தப்பித்து சென்றுள்ளனர்.

இத்தாக்குதல் முயற்சி தொடர்பில் காவல்துறையிலும் தேர்தல் அலுவலகத்திலும் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.


0/Post a Comment/Comments

Previous Post Next Post