நான் தயார். சுகாஸ் தயாரா? - அங்கஐன் விடுத்துள்ள பகிரங்க சவால் - Yarl Voice நான் தயார். சுகாஸ் தயாரா? - அங்கஐன் விடுத்துள்ள பகிரங்க சவால் - Yarl Voice

நான் தயார். சுகாஸ் தயாரா? - அங்கஐன் விடுத்துள்ள பகிரங்க சவால்

நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் எனது தேர்தல் பிரச்சாரப் பணிக்காக இலங்கை இராணுவத்தினர் ஈடுபடுத்தப்படுவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் உறுதிப்படுத்தினால் நான் இந்தத் தேர்தலில் இருந்து விலகுவதற்கு தயாராக இருக்கிறேன்  என தெரிவித்துள்ள அங்கயன் இராமநாதன் இதனை நிரூபிக்க தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தவறினால் அவர்கள் தேர்தலில் இருந்து விலகுவதற்கு தயாராக இருக்கின்றனரா? என்றும் சவால் விடுத்துள்ளார்.

யாழ்  ஊடக மையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஊடக சந்திப்பொன்றில் அங்கஜன் ராமநாதன் கோத்தபாயவின் ஏஜென்ட் என்றும் அவர்களை மக்கள் நிராகரிக்க வேண்டும் என்றும் ஒரு கருத்தினை தெரிவித்தார். 

அது மட்டும் அல்லாது அந்தக் கட்சியின்பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பாளரும் சட்டத்தரணியுமான சுகாஸ் அங்கைன் இராமநாதனின் தேர்தல் பிரச்சாரப் பணிக்காக ராணுவத்தினரும் பாதுகாப்புத் தரப்பினரும் பயன்படுத்தப்படுவதாகவும் தெரிவித்திருக்கின்றார்.

இந்தக் கருத்தை நான் முற்றாக மறுக்கின்றேன்.எனது தேர்தல் பிரச்சாரப் பணிக்காக பாதுகாப்பு தரப்பில் ஒருவரேனும் பயன்படுத்தப்பட்டால் அதனை ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும்.அவ்வாறு அவர்கள் ஆதாரத்துடன் நிரூபித்தால் நான் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் இருந்து நான் முழுமையாக விலகுகின்றேன்.

இதேபோன்று எனது பிரச்சாரப் பணிகளுக்காக பாதுகாப்புத் தரப்பினர் ஈடுபடுத்தப் பட்டனர் என்பதை அவர்களால் நிரூபிக்க முடியாவிட்டால் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் இந்தத் தேர்தலில் இருந்து விலகிக் கொள்வார்களா?என்பதையும் அவர்கள் பகிரங்கமாக தெரிவித்து கொள்ள வேண்டும்.

நான் அபிவிருத்திகளையும் அரசியல் தீர்வு இணையும் முன்னெடுப்பதற்காகவே தேசிய கட்சியுடன் இணைந்து பயணிக்கின்றேன் என்றார்.
--

0/Post a Comment/Comments

Previous Post Next Post