முன்னணியின் அலுவலகத்தில் ஒருவர் கைது - விசாரணையின் பின்னர் பிணையில் விடுதலை - Yarl Voice முன்னணியின் அலுவலகத்தில் ஒருவர் கைது - விசாரணையின் பின்னர் பிணையில் விடுதலை - Yarl Voice

முன்னணியின் அலுவலகத்தில் ஒருவர் கைது - விசாரணையின் பின்னர் பிணையில் விடுதலை

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் வைத்து இன்றிரவு ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணைகளின் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் குறித்து தெரிய வருவதாவது..

தமிழீழ விடுதலைப் புலிகளின் கரும்புலி நாளான இன்று யாழ் மாவட்டத்தில் பல இடங்களின் இரானுவம் மற்றும் பொலிஸ் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு பல்வேறு முக்கிய இடங்களும் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டிருந்தது.

குறிப்பாக யாழ் பல்கலைக்கழகம் மற்றும் பல கட்சிகளின் அலுவலகங்கள் முன்பாக இன்று காலை முதல் இரானுவம் பொலிஸார் குவிக்கப்பட்டு கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

குறிப்பாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கொக்குவில் அலுவலகத்தில் இன்று காலை முதல் இரானுவம் பொலிஸார் குவிக்கப்பட்டு அங்கு வருபவர்களும் கண்காணிக்கப்பட்டனர்.

இவ்வாறான நிலையில் இன்று இரவு முன்னிணியின் திருநெல்வேலியில் உள்ள அலுவலகத்தில் இரர்னுவம் பொலிஸார் குவிக்கப்பட்டு கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன் போது குறித்த அலுவலககமும் சோதனையிடப்பட்ட போது அங்கிருந்து தேர்தல் சுவரொட்டிகள் மீட்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தேர்தல் சுவரொட்டிகளை வீட்டில் பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் குறித்த அலுவலகம் அமைந்துள்ள வீட்டில் இருந்த ஒருவர் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்டிவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்து சில மணி நேரங்களின் பின்னர் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன் தேர்தல் சுவரொட்டிகளை பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டு சம்மந்தமாக பொலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

 

 

0/Post a Comment/Comments

Previous Post Next Post