வடக்கில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத, எல்லை தாண்டிய தொழில்களுக்கு எதிராக நடவடிக்கை - அமைச்சர் டக்ளஸ் - Yarl Voice வடக்கில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத, எல்லை தாண்டிய தொழில்களுக்கு எதிராக நடவடிக்கை - அமைச்சர் டக்ளஸ் - Yarl Voice

வடக்கில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத, எல்லை தாண்டிய தொழில்களுக்கு எதிராக நடவடிக்கை - அமைச்சர் டக்ளஸ்

இலங்கை கடற்பரப்புகளில்  தடைசெய்யப்பட்ட கடற்றொழில் முறைகளை கையாண்டு தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை உடனடியாக கட்டுப்படுத்துவதுடன் இந்திய கடற்றொழிலாளர்களது எல்லைதாண்டிய நடவடிக்கைகளும் மிகவிரைவில் கட்டுப்படுத்தப்படும் என கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இலங்கை கடற்பரப்புக்களில்இ குறிப்பாக வடபகுதி கடற்பரப்பகளில் அதிகரித்துவரும் சட்டவிரோத தொழில் முறைமைகளால் கடற்றொழிலாளர்கள் பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டும் நாட்டின் கடல்வளம் பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்யும் வகையிலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

முன்னதாக கடற்றொழிலாளர்கள் தமது தொழில் நடவடிக்கைகளின்போது எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பார்வைக்கு கொண்டு வந்திருந்தனர்.

குறிப்பாக சட்ட விரோத தொழில் முறைகளை பயன்படுத்துதல்இ எல்லை தாண்டிய இந்திய கடற்றொழிலாளர்களது செயற்பாடுகள்இ கடலட்டைத் தொழிலுக்கான அனுமதியை இரத்துச் செய்தல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் எடுத்துக் கூறியிருந்ததுடன் அவற்றை தடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு தமது தொழில்துறையை பாதுகாத்து தருமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர்இ அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களுக்கு அமையஇ வட பகுதியில் மேற்கொள்ளப்படும் அனைத்து வகையான சட்டவிரோத தொழில் முறைகளையும் கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

அதுமட்டுமல்லாது இந்திய கடற்றொழிலாளர்களது எல்லைதாண்டிய நடவடிக்கைகளால் இலங்கை தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை கருத்தில் கொண்டு அத்தகைய சட்டவிரோத நடவடிக்கைகளையும் தடுப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post