இரு தேசம் ஒரு நாடு என்பதே எமது கொள்கை - தேசத்தை அழிக்கும் கூட்டமைப்பை நிராகரிப்போம் - ஐங்கரநேசன் அறைகூவல் - Yarl Voice இரு தேசம் ஒரு நாடு என்பதே எமது கொள்கை - தேசத்தை அழிக்கும் கூட்டமைப்பை நிராகரிப்போம் - ஐங்கரநேசன் அறைகூவல் - Yarl Voice

இரு தேசம் ஒரு நாடு என்பதே எமது கொள்கை - தேசத்தை அழிக்கும் கூட்டமைப்பை நிராகரிப்போம் - ஐங்கரநேசன் அறைகூவல்

முள்ளிவாய்க்காலில் இலங்கை அரசாங்கம் இனஅழிப்பு ஏற்படுத்தியது போன்றே முள்ளிவாய்க்காலிற்கு பின்னர் தமிழ்த் தேசிய அரசியலில் தமிழ்த் தேசியத்தை நீக்கி பேரழிவை ஏற்படுத்தும் செயற்பாடுகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுத்து வருவதாக தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் தேசிய இனம் என்பதுடன் ஒரு தேசமாகவும் இருக்கின்ற நிலையில் எங்களது தேசத்தை அழிக்கின்ற வகையில் அரசாங்கம் செயற்படுகின்றதற்கு கூட்டமைப்பும் ஆதரவை வழங்கி வருவதாவும் குற்றஞ்சாட்டியுள்ள ஐங்கரநேசன் இரு தேசம் ஒரு நாடு என்ற எமது கொள்கைக்கமைய இந்த தேசத்தை பாதுகாக்க வேண்டுமாயின் கூட்டமைப்பை நிராகரிக்க வேண்டுமென்றும் மக்களிடம் கோரியுள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்று நடாத்திய ஊடக சந்திப்பின் போதே தமிழ்த் தேசிய பசுமைய இயக்கத்தின் தலைவரும் தேர்தலில் சுயேட்சைக் குழுவின் சார்பில் மாம்பழம் சின்னத்தில் போட்டியிடுகின்ற பொ.ஐங்கரநேசன்; மேற்கண்டவாறு தெரிவித்தார். அச் சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது..

தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டம் அஞ்சல் ஓட்டம் போன்றது. தந்தை செல்வாவினால் முன்னெடுக்கப்பட்டு வந்த ஐனநாயக ரீதியிலான போராட்டம் ஒரு குறிக்கப்பட்ட தூரத்தைக் கடந்து தலைவர் பிரபாகரன் அவர்களிடம் ஆயுதப் போராட்ட ரீதியாhக தேசியப் போராட்டத்தை முன்னெடுக்க பிறப்பிக்கப்பட்ட ஆணை முள்ளிவாய்க்காலில் முறியடிக்கப்பட்டது. 

தலைவர் பிரபாகரன் அவர்கள் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தை முற்று முழுதாக தானே முடித்து வைப்பார் என்று அவர் சொல்லவில்லை. ஆயுதப் போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட முடியாத அளவிற்கு சர்வதேச அரசியல் மாறியிருந்த சூழலில் ஐனநாயக ரீதியாக அந்தப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய பணி கூட்டமைப்பின் கைகளில் ஒப்படைக்கப்பட்டது. 

விடுதலைப் புலிகளினாலே உருவாக்கப்பட்டதாக தங்களைச் சொல்லிக் கொள்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் என்ன பணிக்காக என்ன காரணத்திற்காக அவர்களினால் இந்தக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டதோ அந்தப் பணியை செய்யாமல் அதற்கு எதிர்மறையான திசையில் தற்பொழுது பயணிக்கத் தொடங்கியிருக்கின்றார்கள்.

தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தினுஐடய ஆயுத அலகு முள்ளிவாய்க்காலில் முறியடிக்கப்பட்டது பெரும் பெரும் சோகம் என்று சொல்லி சொன்னால் கூட்டமைப்பினர் அந்த முள்ளிhய்க்காலில் நிகழ்ந்த இலங்கை அரசாங்கத்தினுடைய போர் தொடுப்பிற்கு நிகரான அழிவை இன்று தமிழ்த் தேசியத்தின் மீது நிகழ்த்திக் கொண்டிருக்கின்றார்கள். 

உண்மையில் கூட்டமைப்பு விடுதலைப் புலிகள் காலத்தில் உருவாக்கப்பட்ட பொழுது அங்கே விடுதலைப் புலிகளை ஏற்றுக் கொண்டவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக போட்டியிட்டார்கள். ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்த இயக்கங்கள் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றிருந்தார்கள். ஆனால் விடுதலைப் புலிகள் அழிவிற்குப் பின்னர் விடுதலைப் புலிகளை ஆதரிக்கக் கூடியவர்கள் அந்தக் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்கள். அதன் பிறகு ஆயுதப் போராட்டத்தை முன்னெடுக்கப்பட்டவர்கள் கூட்டமைப்பில் இருந்து திட்டமிட்டு நீக்கப்பட்டார்கள். 

தற்பொழுது அவர்கள் தமிழ்த் தேசியத்தை நீக்குகின்ற பணியில் மிகத் திவிரமாக ஈடுபட்டுள்ளார்கள். ஆயுதப் போராட்டத்தை ஆதரித்தவர்கள் அல்லது விடுதலைப் புலிகளை ஆதரித்தவர்கள் எல்லாம் படிப்படியாக நீக்கி வந்த கூட்டமைப்பினர் இன்று தமிழ் மக்களிடையே இருக்கக் கூடிய தமிழ்த் தேசிய உணர்வை நீக்குகின்ற செயலில் திட்டமிட்டு இடுபட்டு வருகின்றார்கள். 

இதனால் தான் நான் சொல்லுகின்றேன் முள்ளி வாய்க்காலில் எவ்வாறு ஆயுதப் போராட்ட அலகை முறியடிப்பதற்கு இலங்கை இரர்னுவம் போர் தொடுத்ததோ அதே போன்று தமிழ் நெஞ்சங்களில் இருக்கக் கூடிய தமிழ்த் தேசிய உணர்வை இல்லாமல் செய்வதற்காக இங்கெ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் திட்டமிட்டு பணியாற்றி வருகின்றார்கள். இது இன்னுமொரு முள்ளிவாய்ய்கால் என்கின்றது தான் என்னுடைய கருத்தாக இருக்கின்றது. 

எங்களைப் பொறுத்தவரையில் நாங்கள் தனியான ஒரு தேசம். இரு தேசம் ஒரு நாடு என்கின்றது தான் தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தினுடையதும் ஆணித்தரமான கொள்கை. இலங்கைத் தீவில் தமிழ் மக்கள் சிங்களவர்கள் இஸ்லாமியர்கள் பறங்கியர்கள் வேடர்கள் மலாயர்கள் இவர்கள் எல்லொருமே தனித் தனி தேசிய இனங்கள். ஆனால் தேசிய இனங்கள் எல்லாமே தேசங்களாக இருக்க முடியாது. 

இங்கே பறங்கியர்களோ அல்லது இஸ்லாமியர்களோ அல்லது மலாயர்களோ தங்களை தேசங்கள் என்று சொல்லி இலங்கையில் சொந்தம் கொண்டாட முடியாது. அவர்கள் தேசிய இனங்கள். நாங்கள் தேசிய இனம் என்பதற்கு அப்பால் நாங்கள் தனியான ஒரு தேசம். இங்கு நாங்கள் படித்த பாடங்கள். தேசத்தையும் நாடு என்கின்றதையும் ஒருசேரப் புரிந்து கொள்கின்ற மனப்பக்குவத்தைத்தான் ஏற்படுத்தி தந்திருக்கின்றது. ஆனால் தேசம் என்கின்றது வேறு. நாட என்கின்றது வேறு. 

அதாவது தேசம் என்கின்றது ஒரு தேசிய இனத்திற்கு ஆட்சிக்குட்பட்ட நிலப்பரப்பு இருத்தல் வேண்டும். ஒரு தேசிய இனம் என்று சொன்னால் அந்த தேசிய இனத்திற்கு குறிப்பிட்டளவு நிலப்பரப்பு சொந்தமாக இருத்தல் வேண்டும். அந்தத் தேசிய இன மக்களிடையே பரஸ்பரம் சார்பு நிலை இருத்தல் வேண்டும். பண்பாட்டு ரீதியாக அல்லது மொழி ரீதியாக அல்லது சமய ரீதியாக வௌ;வெறு விடயங்களில் சார்பு நிலை இருத்தல் வேண்டும். இவை யாவற்றுக்கும் அப்பால் ஒரு தேசம் என்கின்ற உணர:வு நிலை அந்த தேசிய இனத்திற்கு இருத்தல் வேண்டும். 

தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் நாங்கள் ஏன் எங்களை ஒரு தேசமாக இங்கு நிலை நிறுத்துகிறோம் என்று சொன்னால் தமிழ் மன்னர்களினால் ஆளப்பட்ட ஆட்சிக்குட்படுத்தப்பட்ட ஒரு நிலப்பரப்பு இருந்தது. முன்னர் ஆட்சிக் காலத்திற்குப் பிறகு விடுதலைப் புலிகளிடம் ஒரு ஆட்சிக்குட்பட்ட நிலப்பரப்பு இருந்தது. ஆனால் இலங்கை அரசாங்கத்தினால் விடுதலைப் புலிகளுக்கு இரந்த தமிழ் மக்களுக்கு உரித்தான அந்த ஆட்சிக்குரிய நிலப்பரப்பு பறிக்கப்பட்டு விட்டது. ஆட்சி பறிக்கப்பட்டு விட்டது. 

ஒரு தேசத்திற்கு இரண்டாவதாக இருக்க வேண்டிய குறிக்கப்பட்ட குறைந்தபட்ச நிலப்பரப்பாவது இருக்க வேண்டம். எங்களுக்கு வடக்கு கிழக்கு தனியலகு. தனியான ஒரு தாயகமாக இருக்கின்றது. இந்தத் தயாகத்தையும் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் படி 13 ஆவது திரத்தத்தின்படி இணைக்கப்பட்ட வடக்கு கிழக்கை இலங்கை அரசாங்கம் திட்டமிட்டு பிரித்ததன் மூலம் தமிழ் மக்களுக்கு உரித்தான பாரம்பரிய தாயகத்தையும் பிரிக்கினற அல்லது குறைக்கின்ற சூழ்ச்சி நிரலுக்குள் தொடர்ந்து இயங்கி வருகின்றது. 

நாங்கள் விடுதலைப் புலிகளினுடைய அழிவுடன் எங்கள் ஆட்சிக்குட்பட்ட நிலப்பரப்பை இழந்தோம். இப்பொழுது படிப்படியாக எங்களுக்கான தயாகத்தினுடைய நிலப்பரப்பையும் இழந்த வருகின்றோம். புரஸ்பரம் இருக்கக் கூடிய சார்பு நிலையையும் பண்பாடு ரீதியாக அல்லது மொழி ரீதியாக சமய ரீதியாக எங்களுக்கு இருக்கக் கூடிய சார்பு நிலையும் திட்டமிட்டு பல்வெறு வகையான கலாச்சாரப் பிண்ணனிகளையும் பண்பாட்டுப் பிண்ணணிகளையும் தமிழ் மக்களிடையெ திணப்பதன் மூலம் அதனிடையே இலங்கை அரசாங்கம் சீர்குஐலத்த வருகின்றது. 

தற்சமயம் எங்களிடம் இருக்கின்ற ஆயுதம் அல்லது கடைசி உணர:வு தமிழ் மக்கள் நாங்கள் தனியான ஒரு தேசம் என்கின்ற உணர:வு நிலை தான் எங்களிடம் மிஞ்சியிருக்கின்றது. ஆனால் தமிழ் மக்கள் தனியான ஒரு தேசம் என்கின்ற இந்த உணர்வு நிலையையும் கூடு;டமைப்பு திட்டமிட்டு சிதைத்து வருகின்றது. எதிர்காலத்தில் இந்தத் தீவில் தமிழ் மக்கள் இஸ்லாமியர்களைப் போன்றோ வேடர்களைப் போன்றோ மலாயர்களைப் போன்றொ பறங்கியர்களைப் போன்றொ தாங்களும் ஒரு தேசம் என்று சொந்தம் கொண்டாட முடியாதபடிக்கு இவர்கள் திட்டமிட்டு செயலாற்றி வருகின்றார்கள். 

இந்த விடத்தில் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் அவர்கள் சில வாரங்களுக்கு முன்னர் தான் ஆயுதப் போராட்டத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என்று சொன்னதில் இருந்த தொடங்கி இப்பொழுது கூட்டமைப்பு அமைச்சரவையை ஏற்றுக் கொள்வதற்காக நிங்கள் ஆணை வழங்குங்கள் என்று சொல்லி மக்களிடம் பார்த்து கேட்கின்ற வரைக்கும் இந்த நிகழ்ச்சி நிரல் என்னவென்று சொல்லிச் சொன்னால் இலங்கையினுடைய தேசியத்துள் சிங்கள தேசியத்திற்குள் தமிழ் மக்களைக் கரைத்து தமிழ் மக்கள் தாங்கள் தனியான ஒரு தேசம் என்கின்ற உணர்வு நிலையை மழுங்கடிப்பது தான் அவர்களுடைய நோக்கமாக இருக்கின்றது. 

இதனை தனி ஒருவருடைய கூற்றாக நாங்கள் எடுத்தக் கொள்ள முடியாது. குட்சியினுடைய உயர்ந்த பதவியான ஒரு பேச்சாளர் என்கின்ற தகுதியில் இரந்து சுமந்திரன் உதிர்க்கின்ற அத்தனை சொற்களும் அத்தனை கருத்துக்களுமே கூட அந்தக் கட்சியினுடைய அதாவது கூடு;டமைப்பின் கருத்தாகவே எடுத்துக் கொள்ளப்படும். அமைச்சர் பதவியை ஏற்றுக் கொள்வதற்கு ஆணை தாருங்கள் என்று சொல்லி இவர்கள் கேட்டதை கூட்டமைப்பில் இருக்கக் கூ டிய சிலர் எதிர்க்கின்றதாகக் கூட செய்திகள் வருகின்றன. 

ஆனால் அவை யாவும் இந்த எதிர்ப்பு கூட நடிப்பு என்று தான் நான் சொல்லுவேன். ஏனெனில் ஒரு பக்கம் நீங்கள் எரியுங்கள் இன்னொரு பக்ககம் நாங்கள் அணைப்பொம் என்று சொல்கின்றது போல தான் இந்தக் கருத்துக்கள் இருக்கின்றது. உண்மையில் ஒன்று சுமந்திரன் அவர்களை பேச்சாளர் பதவியில் இருந்த வெளியெற்றி கட்சியில் இருந்த நீக்கியதன் பின்னர் இவர்கள் அவரது கருத்து தொடர்பாக விமர்சனம் சொல்லுவார்களாக இருந்தால் அதனை நாங்கள் ஏற்றுக் கொள்ளலாம். 
ஆனால் கூட்டமைப்பிற்குள் இரந்து கொண்டே தனிப்பட்ட முறையில் அது சுமந்திரனுஐடய கருத்து அது என்றும் தற்கு நாங்கள் உடன்படவில்லை என்றும் கருத்துச் சொல்வதை எந்தக் காலத்திலும் ஏற்றுக் கொள்ளப்பட முடியாது. இவர்கள் இன்று டக்களஸ் தேவானந்தா செய்த பணியையே தாங்கள் முன்னெடுப்பதற்கு வந்திருக்கின்றார்கள். 

யுத்தம் முடிந்ததன் பின்னர் மகிந்த ராஐபக்ச அவர்கள் பதவி ஏற்ற போது கூட எங்களுடைய தேசிய இனப்பிரச்சனைக்கான தீர்வை கொண்டு சென்றிரக்க முடியும். முகிந்த ராஐபக்சவிற்கு பிறகு மைத்திரி – ரணில் தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம் உருவான போத கூட இவர்களது தயவு அவர்களுக்கு தேவைப்பட்டது. இவர்களுடைய முண்டு கொடுப்பின் பின்னர் தான் அந்த ஆட்சி உருவாக்கப்பட்டது. 

பல சர்வதேச நாடுகளுடன் சேர்ந்து சுமந்திரன் அவர்களும் பணியாற்றி தான் இந்த நல்லாட்சி அரசைக் கொண்டு வந்தார் என்று அவரே ல இடங்களில் சொல்லியிருக்கிறார். ஆனால் இவர்கள் நிபந்தனையாக விதித்தது என்னவென்றால் பிரதி சபாநாயகராக அங்கஐனுக்கு பதவி வழங்கக் கூடாதென்றும் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு அமைச்சுப் பதவி வழங்கக் கூடாது என்று சொல்லி தங்களுடைய வாக்கு வங்கியை சரிக்கக் கூடிய நிகழ்ச்சி நிரலுக்கு அரசாங்கம் போய் விடக் கூடாது என்கின்ற விடயத்தில் கவனம் செலுத்தி தாங்கள் நிழல் அமைச்சர்களாக தொழில்பட்டார்களே தவிர காணாமல் போனோர்கள் தொடர்பாகவே அல்லது சிறையில் இருக்கும் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாகவோ எந்தவிதமான சாதகமான நடவடிக்கையிலும் இவர்கள் ஈடுபடவில்லை. 

இப்பொழுது மிண்டும் தேர்தலை எதிர்கொள்கின்ற பொழுது அவர்கள் மகிந்த ராஐபக்சவோ அல்லது கோத்தாபாய ராஐபக்சவையோ பெரும் இனவாதிகளாகக் காட்டி வாக்குகளைப் பெறுகின்றதற்காக மக்களைக் கவருவதற்கு முயற்சிக்கின்றார்கள். உண்மையில் ராஐபக்ச சகோதரர்கள் என்கின்ற பூதம் சாடியில் அடைத்து வைக்கப்பட வேண்டியர்கள். சாடிக்கு வெளியில் திறந்து விட்டவர்கள் இவர்கள் தான். 

சர்வதேச விசாரணை தேவையில்லை. கலப்பு நீதிமன்ற விசாரணை தேவையில்லை என்று சொல்லி இந்த அரசாங்கம் சொல்லக் கூடிய அளவிற்கு ஐக்கிய நாடுகள் சபையில் தீர்மானிக்கப்பட்ட பிரேரனைக்கு மாறாக இங்கே இந்த அரசாங்கம் நடந்த கொள்கின்ற அளவிற்கு கால நீடிப்பை ஒவ்வொரு தடவைளும் பெற்றுக் கொடுத்து இந்த தேசிய இனப் பிரச்சனையை நீர்த்துப் போகச் செய்தவர்கள் கூட்டமைப்பினர் தான். 

ஆகவே வரப் போகின்ற இந்த தேர்தலில் ஒட்டு மொத்தமாக கூட்டமைப்பை தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டுமென்று சொல்லி கேட்டக் கொள்கின்றென். இதில் தனியே ஒரேயொரு சுமந்திரன் மாத்திரமல்ல. அங்கே இருக்கக் கூடிய அத்தனை பேருமே அவர்களை ஏற்றுக் கொண்டவர்களாகத் தான் இருக்கின்றார்கள். எதிரும் புதிருமாக இருந்த சிறிதரன் அவர்களையும் சுமந்திரன் அவர்களையும் சேர்த்து வாக்கு வேட்டையாடக் கூடிய அளவிற்கு இன்று கூட்டமைப்பினுடைய நிலை மாற்றமடைந்து நான் ஏற்கனவே குறிப்பிட்டது போன்று தமிழ் மக்களை தேசிய நீக்கம் செய்கின்ற தேசம் என்கின்ற எஞ்சியிருக்கின்ற உணர:வு நிலையையும் இல்லாமல் செய்யக் கூடிய நிலைக்கு கூட்டமைப்பினர் இட்டுச் செல்கின்றார்கள். 

ஆகவே தமிழ் மக்களே வரப்பொகின்ற இந்தப் பாராளுமன்றத் தேர்தலை எவ்வாறு எங்கள் ஆயுதப் போராட்ட அலகை முறியடிப்பதற்கு இலங்கை அரசாங்கம் ஒரு யுத்தத்தை தொடுத்து பெரும் அழிவை நாங்கள் சந்தித்தமோ அதே போன்ற பேர் அழிவு தான் கூடு;டமைப்பிற்கு நீங்கள் வாக்களிப்பதாலும் ஏற்படுத்தப்படும். ஆகவே தமிழ் மக்கள் தேசிய இனம் என்கின்றதற்கும் அப்பால் அவர்கள் ஒரு தேசம் என்கின்ற உணர:வு நிலை கட்டமைக்கப்படுவதை இவர்கள் விரும்பவில்லை. ஆகவே மிக அவதானமாக இருந்து கூட்டமைப்பின் அத்தனை வேட்பாளர்களையும் நீங்கள் இந்தத் தேர்தலில் தோற்கடிக்க வேண்டுமென்பது எனது கோரிக்கையாக இருக்கின்றது என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post