எமது இளைஞர்கள் வாழ முடியாத அச்சமான சூழல் உருவாக்கப்படுகிறது - சிறிதரன் குற்றச்சாட்டு - Yarl Voice எமது இளைஞர்கள் வாழ முடியாத அச்சமான சூழல் உருவாக்கப்படுகிறது - சிறிதரன் குற்றச்சாட்டு - Yarl Voice

எமது இளைஞர்கள் வாழ முடியாத அச்சமான சூழல் உருவாக்கப்படுகிறது - சிறிதரன் குற்றச்சாட்டு

வடக்கிலும் கிழக்கிலும் தமிழ் இளைஞர்கள் வாழமுடியாத சூழல் உருவாக்கப்படுகிறது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வேட்ப்பாளருமான சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்

 நேற்றையதினம் கிளிநொச்சி முழங்காவில் பகுதியில் இடம்பெற்ற  தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் அவ்வாறு தெரிவித்துள்ளார்

 அவர் மேலும் தெரிவிக்கையில்

 சிறிது காலமாவது சுதந்திரமான சுவாசக் காற்றை மக்கள் சுவாசிக்கக் கூடிய சூலலை நாங்கள் உருவாக்கி இருக்கின்றோம் பல முன்னாள் போராளிகள் கூட எங்களைப் பார்த்து தங்கள் நிம்மதிப் பெருமூச்சுக்களை விட்டிருந்தார்கள் ஆனால்  நான் இன்று மதியம் முழங்காவில் பகுதிக்கு வந்த பொழுது ஒரு ஆலயத்தின் பூசகராக இருக்கின்ற முன்னாள் போராளி அவரது குடும்பத்தார் கதறக் கதற தூக்கிச் செல்லப்பட்டிருக்கிறார்கள்.

 இது இந்த மண்ணிலே இன்று நடந்த சம்பவம் இதே போல கடந்த பத்து நாட்களுக்குள் எமது மாவட்டத்தில் மட்டும் முன்னாள் போராளிகள் இருபத்துமூன்றுக்கும் மேற்ப்பட்டவர்கள் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள் சத்தம் எதும் இன்றி கைதுகள் நடைபெற்றுக்கொண்டுள்ளது காணாமல் போதல் நடைபெற்றுக்கொண்டுள்ளது மிகவும் அச்சம் தரக் கூடிய சூழல் உருவாக்கப்பட்டுக் கொண்டுள்ளது

  வெளியிலே உலகத்தை ஆட்டிப் படைக்கின்ற கொரோணா என்கின்ற ஒரு நோய்பற்றி சொல்லப்பட்டாலும் கூட இலங்கையில் குறிப்பாக வடக்கிலும் கிழக்கிலும் தமிழ் இளைஞர்கள் வாழமுடியாத ஒரு சூழல் உருவாக்கப்படுகிறது

 இவ்வாறு   நடைபெற்றுக் கொண்டுள்ள கைதுகள் தொடர்பாக எனியும் நடக்கப் போவவை தொடர்பாக யார் பேசுவார்கள் நாங்களா ?? அல்லது சுயற்சையாக களம் இறக்கப்பட்டுள்ளவர்களா??  அல்லது ஒரு சீற்றுக்கு வாக்களியுங்கள் எனக் கேட்பவர்களா ??செய்யப் போகிறார்கள்!

 இதே போன்ற ஒரு சூழலில் இருந்த நாங்கள் இதில் இருந்து விடுபட கடந்த 2015 ம் ஆண்டு ஒரு அரசியல் மாற்றத்திற்காக கடுமையாக போராடினோம் அதனால் ஒரு எதிரி மாற்றம் செய்து மைத்திரிபால அவர்களை ஜனாதிபதியாக்கி ரணில் ஆகியோருடன் பேச்சு வார்த்தைகளை செய்து அரசியல் தீர்வு நோக்கி பயணித்தோம் ஆனால் இப்பொழுது பழைய நிலை தோன்றிவிட்டது  

 ஒருவாரத்திற்கு முன்  கிளிநொச்சி தொண்டமாநகர் பகுதியில் நடைபெற்ற எங்களுடைய பிரச்சாரக் கூட்டம் ஒன்றை தலமை தாங்கி செயற்ப்பட்ட முன்னாள் போராளி கைது செய்யப்பட்டுள்ளார்

விமல் வீரவன்ச சொல்கிறார் யாராவது ஒரு முன்னாள் போராளி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரச்சாரக் கூட்டத்தில் தோன்றினால் கைது செய்யப்படுவார்கள் அல்லது காணாமல் ஆக்கப்படுவார்கள் என்று அவர் கூறுகின்றார்

 இதே அரசின் கடந்த காலத்தில் எங்களுக்கு முன்னாள் போராளிகளை சந்திக்கமுடியாத நிலமை அவர்களுக்கு தேவையான உதவித் திட்டங்களை புலம்பெயர் தமிழர்கள் மூலம் இரகசியமாகவே செய்தோம் பின்னர் தான் வடக்குமாகாண சபை மூலம் ஏதோ முடிந்தளவு தொகையை வழங்கி வாழ்வாதார செயற்பாடுகளை முன்னெடுக்கக் கூடியதாக இருந்தது .

அண்மையில் கூட சில போராளிகளூக்கு தலா ஒரு லட்சம் வீதம் கனடா நாட்டில் வாழும் தமிழர்கள் மூலம் வழங்கி இருந்தோம் ஆனால் இப்போது அவர்களுடன் கூட்டமாக பேசுவது அவர்களது இன்ப துன்பங்களை அறிவது என்பது முடியாத காரியமாகவே உள்ளது காரனம் இன்று நேற்று கடந்த பத்து நாட்களுக்குள் நடக்கின்ற விடயங்களை நீங்கள் சிந்தித்து பாருங்கள்
 
இவ்வாரான ஒரு சூழலில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்பதனை பாருங்கள் சுயற்சையாகவும் வெவ்வேறு சின்னங்களிலும் அரச ஆதரவாலர்கள் அடிவருடிகள் என அனைவரும் வேட்ப்பாளர்களாக களம் இறக்கப்பட்டுள்ளார்கள் பரராஜசிங்கத்தை சுட்டவர்கள் முதல் அற்புதனை சுட்டவர்கள் வரை அனைவரும் வேட்ப்பாளர்கள்.

  ஆகவே உங்கள் வாக்கு தமிழர்களுக்காக குரல்கொடுக்கும் சக்தியாக உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய  எங்களுக்கா இல்லை அரசுக்கு வெள்ளை அடிக்கும் அரச கைக்கூலிகளுக்கா என யோசித்து வாக்களியுங்கள் நீங்களே நீதிபதிகள் என அவர் மேலும் குறிப்பிட்டார்

இப் பிரச்சாரக் கூட்டத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வேட்ப்பாளர்களான மாவைசேனாதிராஜாஇசுமந்திரன்இ சிறீதரன் இஆர்னோள்ட்இசுரேந்திரன் ஆகியோரும் வடக்குமாகாண்சபை அவைத்தலைவர் சிவஞானம் இகரைச்சிஇபச்சைலைப்பள்ளிஇபூநகரி பிரதேசபையின் தவிசாளர்கள் இகட்சியின் செயற்ப்பாட்டாளர்கள்இமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்  

 

0/Post a Comment/Comments

Previous Post Next Post