கோட்டாவுடன் ஐக்கிய தேசியக் கட்சி டீல் - யாழில் சஜித் தெரிவிப்பு - Yarl Voice கோட்டாவுடன் ஐக்கிய தேசியக் கட்சி டீல் - யாழில் சஜித் தெரிவிப்பு - Yarl Voice

கோட்டாவுடன் ஐக்கிய தேசியக் கட்சி டீல் - யாழில் சஜித் தெரிவிப்பு

ஐக்கிய தேசியக் கடசியினர் கோத்தபாயவுடன் இணைவதற்கு பல டீல்கள் போட்டு வருவதாக தெரிவித்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான வேட்ப்பாளர் சஜித் பிரேமதாச  கள்ளர்கள்இதுரோகிகள் இருக்கும் ஐக்கிய தேசியக் கடசியுடன் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இணைய மாடடோம் என்றும் தெரிவித்தார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்இ

நாம் கள்ளர்கள்இமண் கொள்ளையர்கள்இதுரோகிகள் போன்றவர்களுடன் நாம் இனி எந்த சந்தர்ப்பத்திலும் கூட்டு சேர மாடடோம்.ஐக்கிய தேசியக் கடசியினர் கோத்தபாய அரசுடன் இணைந்து செயற்பட பல டீல்களை போட்டு வருகின்றனர்.நாம் இந்த தேர்தலில் வெற்றி பெற போராடுவது இந்த நாட்டு மக்களுக்காகவும் நாட்டினை அபிவிருத்தி பாதையில் கொண்டு சென்று பயணிப்பதற்காகவுமே.தமிழ் மக்களின் இனப்பிரச்சனைக்கு தீர்வாக இந்த நாட்டுக்குள் அதிகாரங்களை பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுப்பேன்.

நான் எதிர்க்கட்சியாக இருந்தபோது இந்த நாட்டில் இடம்பெற்ற பல ஊழல் குற்றச்சாட்டுக்களைஇபாரிய மோசடிவெளிக்கொன்டு வந்தேன்.பக்களுக்கு அவற்றை வெளிப்படுத்தினேன்.நடைபெற இருக்கின்ற தேர்தலில் மக்கள் எனக்கு பலமான ஒரு பிரதிநிதித்துவத்தை தந்தாள் யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களில் கைத் தொழில் துறைகளை உருவாக்கி சுயதொழில் வேலை வாய்ப்புக்களை உருவாக்கி ஓர் புதிய அபிவிருத்தி பிரதேசமாக மாற்றுவேன்.

அதேபோல் உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை குறைந்த போதிலும் எமது நாட்டில் எரிபொருட்களின் விலைகள் இன்றுவரை குறைய வில்லை.எனவே நான் பதவிக்கு வந்தால் 24 மணி நேரத்திற்குள் எரிபொருட்களின் விலையை உடனடியாகவே குறைப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன்.

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலிலே நான் பிரதமராக தெரிவு செய்யப்பட்டால் கிராம மட்டத்தில் இருந்து நகரம் வரைக்கும் துரித அபிவிருத்தியை முன்னெடுப்பேன். அதிலும் குறிப்பாக வடக்கு கிழக்கு என்ற பாரபட்சமின்றி சகல இடங்களுக்கும் சமமான அபிவிருத்திகளை நான் முன்னெடுப்பேன் என்பதே இந்த சந்தர்ப்பத்திலே உறுதி மொழியைத் தருகிறேன்.எனவே எம்மைமக்கள் இந்த தேர்தலில் பலப்படுத்தி என்னை பிரதமராக்க மக்கள் ஆனை தரவேண்டும்.
--

0/Post a Comment/Comments

Previous Post Next Post