யாழில் தமிழ் மக்கள் கூட்டணியை சந்தித்த பிரித்தானிய தூதுவர் - Yarl Voice யாழில் தமிழ் மக்கள் கூட்டணியை சந்தித்த பிரித்தானிய தூதுவர் - Yarl Voice

யாழில் தமிழ் மக்கள் கூட்டணியை சந்தித்த பிரித்தானிய தூதுவர்

பிரித்தானிய தூதரகத்தின் பிரதித் தூதுவர் நெஜில் கவனாக் மற்றும் பிராந்திய பாதுகாப்பு தொடர்பான இரண்டாவது செயலாளர் சிவோன் லெதம் ஆகியோர் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் துணைத் தலைவர்களில் ஒருவரான சுரேஷ் பிறேமச்சந்திரன் மற்றும் முன்னாள் கல்வி அமைச்சர் கலாநிதி சர்வேஸ்வரன் ஆகியோருடன் இன்று சந்தித்து பேசினர்.

வடக்கு மாகாணத்தி;ல் இருக்கக் கூடிய பாதுகாப்பு நிலவரங்கள்இ கைதுகள்இ இராணுவ பிரசன்னங்கள் போன்றவை தொடர்பாகவும் தேர்தல் கள நிலவரங்கள் தொடர்பாகவும் தமிழ் மக்களினுடைய அரசியல் நடவடிக்கைகள் மற்றும் அபிவிருத்திகள் சம்பந்தமாவும் கலந்துரையாடப்பட்டது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post