மாஸ்டர் பட கதாப்பாத்திரம் குறித்து வாய் திறந்த விஜய்! - Yarl Voice மாஸ்டர் பட கதாப்பாத்திரம் குறித்து வாய் திறந்த விஜய்! - Yarl Voice

மாஸ்டர் பட கதாப்பாத்திரம் குறித்து வாய் திறந்த விஜய்!

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள ‘மாஸ்டர்’ திரைப்படம் தற்போது வெளியீட்டுக்கு தயாராக உள்ளது.

இந்த நிலையில் ‘மாஸ்டர்’ திரைப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருப்பதை திரையில் பார்க்க விஜய் மற்றும் விஜய் சேதுபதி ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் சமீபத்தில் விஜய் சேதுபதி அளித்த பேட்டி ஒன்றில் ‘மாஸ்டர்’ திரைப்படத்தில் தனது வில்லன் கேரக்டர் குறித்து அவர் மனம் திறந்து ஒரு சில தகவல்களை வெளியிட்டுள்ளார்.

‘மாஸ்டர்’ திரைப்படத்தில் முழுக்க முழுக்க தனது கதாப்பாத்திரம் வில்லன் என்றும் துளிகூட நல்லவன் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் இது போன்ற கதாப்பாத்திரங்களில் நடிக்க தான் மிகவும் ஆவலுடன் இருந்ததாகவும் அந்த வாய்ப்பு இப்போதுதான் தனக்கு கிடைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த பேட்டியை அவர் ருவிட்டரிலும் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post