இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட்: ஷேன்னான் கேப்ரியலுக்கு அணியில் வாய்ப்பு - Yarl Voice இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட்: ஷேன்னான் கேப்ரியலுக்கு அணியில் வாய்ப்பு - Yarl Voice

இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட்: ஷேன்னான் கேப்ரியலுக்கு அணியில் வாய்ப்பு

இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும், 15 பேர் கொண்ட மேற்கிந்திய தீவுகள் அணியில் விளையாடுவதற்கு வலக்கை வேகப்பந்து வீச்சாளர் ஷேன்னான் கேப்ரியலுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

கணுக்கால் அறுவை சிகிச்சையில் இருந்து மீண்டு வந்த கேப்ரியல், இதுவரை இருப்பு குழுவின் ஒரு பகுதியாக இருந்தார்.

தற்போது, தனது உடற்தகுதியை நிரூபித்தது மட்டுமல்லாமல் இரு பயிற்சி போட்டிகளிலும் சிறப்பாகப் பந்துவீசியதால் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இன்ட்ரா- குழு பயிற்சி போட்டிகளில், கேப்ரியல் மூன்று இன்னிங்ஸ்களில் பந்து வீசினார் மற்றும் 122 ஓட்டங்களுக்கு எட்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

2012ஆம் ஆண்டு லோர்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமான, 32 வயதான ஷேன்னான் கேப்ரியல், இதுவரை 45 போட்டிகளில் விளையாடி 133 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post