விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம் மற்றும் சமுதாய சந்ததியினர் இளையோர் அணி இணைந்துகலந்துரையாடல் .. - Yarl Voice விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம் மற்றும் சமுதாய சந்ததியினர் இளையோர் அணி இணைந்துகலந்துரையாடல் .. - Yarl Voice

விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம் மற்றும் சமுதாய சந்ததியினர் இளையோர் அணி இணைந்துகலந்துரையாடல் ..

விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம் மற்றும் சமுதாய சந்ததியினர் இளையோர் அணி இணைந்து தற்போதைய சூழ்நிலையில் இளைஞர்களும் பெண்களும் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று திருநெல்வேலியிலுள்ள விழுது ஆற்றல்மேம்பாட்டு மையத்தில் இன்று மேம்பாட்டு மையத்தின் ஆவணப்படுத்தல் உத்தியோகத்தர் திருமதி சிவகுமார் கோமதி தலைமையில் இடம்பெற்றது. 

இந்தக் கலந்துரையாடலில் வரவேற்புரையை சமுதாய சங்கிலிகள் அமைப்பின் உறுப்பினர் கதிர்காமநாதன் அனோயா ஆற்றினார்.

இந்தக் கலந்துரையாடலில் தற்போதைய சூழ்நிலையில் பெண்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.

அதில் குறிப்பாக நுண்நிதிக்கடன்களால் பெண்கள் எதிர்நோக்கும் பாரிய பிரச்சினைகள்,கிடைக்கப்பெற்ற வீட்டுத்திட்டங்களுக்கான நிதி கிடைக்காமையினால் குடும்ங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் போதைப்பொருள் பாவனை அதிகரிப்பினால் இளைஞர்கள் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்பட்டது. 

அன்றாட வாழ்வில் பெண்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளும் அவற்றை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பிலும் கலந்துகொண்டவர்களுக்கு விழிப்புணர்வுகள் வழங்கப்பட்டது.

இந்த கலந்துரையாடலில் போதைப்பொருள் பாவனையின் அதிகரிப்பும் அவற்றைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக மதுவரித்திணைக்கள அதிகாரி கிருபாகரன்             உரையாற்றினார்.

யாழ்மாவட்டத்தைச் சேர்ந்த பெண்கள் அமைப்புக்கள் பொது அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள் இதில் கலந்துகொண்டனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post