அயர்லாந்துக்கு பயணிக்கும் வெளிநாட்டவர் தனிமைப்படுத்தப்படமாட்டர் – புதிய அறிவிப்பு வெளியானது - Yarl Voice அயர்லாந்துக்கு பயணிக்கும் வெளிநாட்டவர் தனிமைப்படுத்தப்படமாட்டர் – புதிய அறிவிப்பு வெளியானது - Yarl Voice

அயர்லாந்துக்கு பயணிக்கும் வெளிநாட்டவர் தனிமைப்படுத்தப்படமாட்டர் – புதிய அறிவிப்பு வெளியானது

கொரோனா வைரஸ் பரவலால் விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணிகளுக்கான தனிமைப்படுத்தல் விதிமுறையினைத் தளர்த்துவதற்கு அயர்லாந்து அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

குறித்த தளர்வு எதிர்வரும் 20ம் திகதிமுதல் அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அயர்லாந்து அரசாங்கத்தினால் வெளியிடப்படும் ஆபத்துக் குறைந்த நாடுகளின் பட்டியலில் இடம்பிடிக்கவுள்ள நாடுகளில் இருந்து தமது பிராந்தியத்துக்கு வருகை தருவோர் தனிமைப்படுத்தப்பட மாட்டார்கள் என அயர்லாந்தின் போக்குவரத்து அமைச்சர் ஏமன் ரேயான் தெரிவித்துள்ளார்.

குறித்த தனிமைப்படுத்தல் நடவடிக்கை ஜூலை மாதம் 09ம் திகதி முதல் தளர்த்தப்படும் என அயர்லாந்தின் முன்னாள் பிரதமர் லியோ வராத்கார் கடந்த ஜூன் மாதம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ரேயான், ஆபத்துக்குறைந்த நாடுகளின் பட்டியல் (Green List) எதிர்வரும் 20ம் திகதி வெளியிடப்படுமென தெரிவித்துள்ள அதேவேளை குறித்த பட்டியலின் அடிப்படையில் செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post