தமிழினத்திற்கு துரோகமிழைத்த கூட்டமைப்பு - வேட்பாளர் வரதராஜசிங்கம் குற்றச்சாட்டு - Yarl Voice தமிழினத்திற்கு துரோகமிழைத்த கூட்டமைப்பு - வேட்பாளர் வரதராஜசிங்கம் குற்றச்சாட்டு - Yarl Voice

தமிழினத்திற்கு துரோகமிழைத்த கூட்டமைப்பு - வேட்பாளர் வரதராஜசிங்கம் குற்றச்சாட்டு

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகர id தமிழ் தேசிய கூட்டமைப்பு துரோகம் செய்து அவரை நாசமாக்கியது என சிறிலங்கா சுதந்திர கட்சியின் வேட்பாளரும் வர்த்தகருமான பரநிருபசிங்கம் வரதராஜசிங்கம் குற்றம் சாட்டியுள்ளார். 

யாழில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்.. 

நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தல் நல்லதொரு சூழலில் நடக்கவுள்ளது. இந்த முறை நாம் மூன்று ஆசனங்களை பெற்றுக் கொள்வோம். தேர்தல் விஞ்ஞாபனத்தை கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியிட்டோம். வெளியீட்டு நிகழ்வில் இளைஞர்களும் யுவதிகளும் ஒன்றிணைந் திருந்தார்கள். இந்த மாற்றம் எமது தேசத்திற்கு நல்லதொரு விடிவை தரும் என நம்புகின்றேன் 

யாழ்.தேர்தல் மாவட்டத்தில் எல்லா இடமும் நாம் சென்றுள்ளோம். மிக பெரிய அளவில் எமது கூட்டங்கள் நடைபெறுகின்றன. மக்களிடம் சென்று அவர்களின் பிரச்சனைகளை கேட்டறிந்து வருகின்றோம். இன்றைய சூழலில் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அதனால் மக்களை நாடி சென்று எங்களுடைய திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்த்து வருகின்றோம். 

வடக்கு பகுதி அபிவிருத்தியடைந்தது சிறிலங்கா சுதந்திர கட்சியினால் தான் என்பதனை அனைவரும் அறிவார்கள். விவசாயத்தின் ஊடாக நாம் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க உள்ளோம் 

கடல் நீரை நன்னீர் ஆக்குவதன் ஊடாக குடிநீர் மட்டும் அல்ல விவசாய நடவடிக்கைகளுக்கு கூட பயன்படுத்து கூடியவாறு இருக்கும் வேலையற்றோர் வீதத்தை நூறு வீதம் இல்லாமல் செய்வோம் 

இந்த அரசாங்கத்தின் ஊடாக எமக்கு ஒரு தீர்வை பெற்றுகொள்ள முடியும் என நம்புகின்றோம்.ஏனெனில் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்சே இ மைத்திரி பால சிறிசேனா ஆகியோர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சேவுடன்  ஒரே நேர் கோட்டில் உள்ளார்கள். 

முன்னாள் ஜனாதிபதிகள் முன்னெடுத்த தீர்வு திட்டங்களை ஒன்றினைத்துஇ எமது பிரச்சனைக்கு தீர்வு நிச்சயம் இந்த ஆட்சியில் கிடைக்கும்.எங்களை அனுசரித்து எமக்கான தீர்வான சமஸ்டி தீவினை தருவார்கள் என நம்புகின்றேன். 

அது மட்டுமின்றி எங்கள் இளைஞர்கள் யுவதிகளை ஒன்றிணைத்து அவர்களின் முன்னேற்றம்இ அபிவிருத்தி என்பவை தொடர்பிலும் அதீத கவனம் செலுத்துவார்கள். 

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் தமிழ் தேசிய கூட்டமைப்பை நம்பி நாசமாகி போனார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடாக அரசியல் தீர்வை பெறலாம் எனும் நம்பிக்கையில் தான் இவர்கள் 22 உறுப்பினர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்பினார்கள். ஆனால் அவர்கள் அவரின் நம்பிக்கையை வீணடித்துஇ  நடித்து அவரை ஏமாற்றியதுடன்இ எமது மக்களையும் அழித்து விட்டனர். 

இது நூறு ஆண்டுகள் சென்றாலும் இவற்றை மறக்க முடியாது. எமது தேசத்தில் நடந்த அவலங்கள் அவை. கூட்டமைப்பின் இழிவான செயலால்தான் அது நடந்தது

யுத்தத்தின் கோரத்தால் மக்கள் அழித்து கொண்டு இருக்கும் போதே அன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சேவிடம் சென்று பேச்சு நடாத்தி யுத்த அழிவை நிறுத்தி இருக்கலாம். 

அல்லது இந்தியாவுடனோ இ சர்வதேச சமூகத்துடனோ பேச்சுக்களை நடாத்தி யுத்தத்தை நிறுத்தி இருக்கலாம். ஆனால் அவர்கள் அதற்கு எந்த முயற்சியும் எடுக்காது நம்பிக்கை துரோகம் செய்து எமது இனத்தை அழித்து விட்டார்கள். 

கூட்டமைப்பின் துரோகத்தின் பின்னரும் கூட்டமைப்பை தொடர்ந்து ஆதரிக்க வேண்டுமா? என மக்களாகிய நீங்கள் சிந்திக்க வேண்டும். என தெரிவித்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post