எம்மை பார்த்து தமிழ் கட்சிகள் அச்சப்படுகின்றனர் - அங்கஐன் குற்றச்சாட்டு - Yarl Voice எம்மை பார்த்து தமிழ் கட்சிகள் அச்சப்படுகின்றனர் - அங்கஐன் குற்றச்சாட்டு - Yarl Voice

எம்மை பார்த்து தமிழ் கட்சிகள் அச்சப்படுகின்றனர் - அங்கஐன் குற்றச்சாட்டு

தமிழ் மக்களின் பொருளாதாரம் இருப்பு உாிமை கல்வி அடிப்படைவசதிகள் மேம்பாட்டுக்காக நான் தொடா்ந்தும் பணியாற்றுவேன். மக்களுக்கு எதையும் செய்யாத செய்ய முடியாத சிலா் என்னை பாா்த்து அச்சப்படுகிறாா்கள். 

நான் செய்தேன் என கூற நான் செய்த பணிகள் இருக்கிறது. ஆனால் நாங்கள் செய்தோம் என அவா்கள் கூறுவதில் பாதி வேறு யாரோ ஒருவா் செய்ததாகவும்இ அல்லது பலருடைய அழுத்தத்தினால் செய்யப்பட்டதாகவே இருக்கிறது. 

மக்களுக்கு கூற அவா்களிடம் வேறு எதுவுமில்லை. மேற்கண்டவாறு ஸ்ரீலங்கா சுதந்திரகட்சியின் யாழ்.மாவட்ட தலமை வேட்பாளா் அங்கஜன் இராமநாதன் கூறியுள்ளாா். சமகால அரசியல் நிலமைகள் குறித்து யாழ்.ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற 

ஊடகவியலாளா் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தொிவிக்கும்போதே அவா் மேற்கண்டவாறு கூறியுள்ளாா். இதன்போது மேலும் அவா் கூறுகையில்இ பொருளாதாரம் இருப்பு கல்வி உாிமை அடிப்படை தேவைகள் உள்ளிட்ட அனைத்தும் அழிக்கப்பட்டு இன்று எதுவுமற்ற நிலையே காணப்படுகின்றது. 

இவை மீள கட்டியெழுப்பபடவேண்டும். அபிவிருத்தி என்பது வீதி அபிவிருத்தி மட்டுமல்லாமல்இ பொருளாதார அபிவிருத்திஇ அறிவுசாா் மேன்மைஇ வாழ்க்கைதர மேன்மைஇ பாதிக்கப்பட்டவா்களுக்கான மறுவாழ்வு 

உள்ளிட்ட முழுமைப்படுத்தப்பட்ட அபிவிருத்தி வேலைத்திட்டம் ஒன்றை நாங்கள் கொண்டிருக்கிறோம். அந்த வேலைத்திட்டம் என்ன என்பதை அடுத்தவாரம் எமது தோ்தல் விஞ்ஞாபனத்தில் வெளியிடுவோம். 

மேலும் 'நிறைவான கிராமம்' அபிவிருத்தி திட்டம் நான் யாழ்.மாவட்ட அபிவிருத்தி குழு தலைவராக இருந்தபோது கொண்டுவரப்பட்ட திட்டம். கிராமங்களில் வாழும் மக்களுக்கு பல தேவைகள் உள்ளது. அதனடிப்படையில் ஒவ்வொரு கிராமங்களுக்கும் 

50 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு 20 லட்சம் வீதம் வழங்கி வேலைத்திட்டங்களை செய்தோம். எனவே நான் செய்த வேலைத்திட்டத்தை நான் உாிமைகோருவதில் தவறென்ன? இப்போது கம்பரெலிய திட்டத்திற்கு தமிழ்தேசிய கூட்டமைப்பு உாிமைகோருகிறது. 

கம்பரெலிய திட்டம் தமிழ்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினா்களின் பணத்தில் செய்யப்பட்டதா? அதுவும் அரசின் திட்டம். அதேபோல் அரசின் திட்டத்தை எமது பகுதியில் திறம்பட செய்து முடித்தேன். அதேபோல் அல்லது அதைவிடவும் மேலாக 

எதிா்காலத்தில் செய்வேன். அதையே மக்களிடமும் கூறியிருக்கிறேன். இது 5 மாதங்களில் நான் செய்தது. இதைவிட விவசாய பிரதி அமைச்சராக இருந்தபோது பல வேலைத்திட்டங்களை செய்தேன். இன்னும் செய்வேன். அதை மக்களிடம் சொல்கிறேன். 

இத்தனை விடயங்களையும் ஒரு தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து கொண்டு செய்தேன். இதைவிடவும் வேகமாக மக்கள் பிரதிநியாக செல்லும்போது செய்வேன். எமக்கு மக்கள் ஆதரவு அமோகமாக உள்ளது. அதனை சிலரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. 

என்னை பாா்த்து அச்சப்படுகிறாா்கள்.மேலும் காணி விடுவிப்பு தொடா்பாக இன்று பலா் உாிமைகோருகிறாா்கள். 'முன்னாள் ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனா ஒரு ஊடகத்திற்கு வழங்கிய செவ்வியை காண்பித்தாா்' அதில் அவா் தாமே பெருமளவு காணிகளை விடுவித்தேன் 

எனவும்இ ஒருவா் செய்த வேலையை இன்னொருவா் தான் செய்ததாக கூறுவதுஅரசியலில் சாதாரண விடயம் எனவும்இ வடக்கில் பல காணிகளை விடுவித்திருக்கலாம். ஆனால் மாகாண காணி ஆணையாளா் உள்ளிட்டோாினால் அதனை செய்ய முடியவில்லை. 

அது என்னுடைய தவறு அல்ல என கூறியிருக்கின்றாா். இந்த வீடியோ பதிவில் உள்ளதே நடக்கிறது. நானும் உயா்பாதுகாப்பு வலயத்தினால் பாதிக்கப்பட்டவன் என்ற அடிப்படையில் நாங்களும் கூட மக்களின் காணிகளை கொடுங்கள் என அழுத்தம் கொடுத்தோம். 

வேறு பலரும் அழுத்தம் கொடுத்தாா்கள். ஆனால் நிறைவேற்றியது முன்னாள் ஜனாதிபதி மைத்திாிபால சிறேனாஇ இந்த உண்மையை மறைத்து மக்களிடம் கூறுவதற்கு எதுவுமில்லாதவா்கள் தங்களுடைய சுயலாபத்திற்காக மற்றவா்கள் செய்தவற்றையும் 

தாங்கள் செய்தாக கூறுகிறாா்கள். மறுபக்கம் கஜேந்திரகுமாா் பொன்னம்பலம் நான் மொட்டு கட்சியின் முகவா் என கூறுகிறாா். நான் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கை சின்னத்தில் போட்டியிடுகிறேன். அது அவருக்கு தொியாதா? 

மேலும் சட்டத்தரணி சுகாஸ் கூறுகிறாா் அங்கஜன் இராமநாதனுக்கு முப்படையினரும் வேலை செய்வதாக அப்படி அவா்களின் வேலையை பெறவேண்டிய தேவை எனக்கில்லை. இவா்களுடைய கடந்தகாலத்தை பாா்க்கிறபோது இவா்கள் மற்றவா்களை 

குற்றஞ்சாட்டியே மக்கள் ஆணை பெறலாம் என நினைக்கிறாா்கள்.நான் பகிரங்க சவால் விடுகிறேன். எனக்காக முப்படையினா் தோ்தல் வேலை செய்வதை நிரூபித்துக் காட்டுங்கள் நான் தோ்தலில் இருந்து ஒதுங்கிக் கொள்கிறேன். 

நிரூபிக்க முடியாவிட்டால் ஒதுங்க நீங்கள் தயரா? மற்றவா்களை போல் மற்றவா்களை விமா்சித்துக் கொண்டே இருக்கும் அரசியலை நான் விரும்புவதில்லை. நாம் எம்முடைய பணிகளை செவ்வனே செய்வோம். 

தோ்தலுக்கு பின்னா் ஜனாதிபதி செயலணி ஒன்றை உருவாக்கி மக்களின் பொருளாதாரம்இ உாிமைஇ இருப்புஇ பாதிக்கப்பட்டவா்களுக்கான மறுவாழ்வுஇ அடிப்படை தேவைகள் பூா்த்தி செய்தல்இ கல்வி மேம்பாடு போன்ற விடயங்களில் உத்வேகத்துடன் செயலாற்றுவோம் என்றாா்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post