ஒற்றையாட்சியா? சமஷ்டியா என்பதை தமிழ் மக்களே தீர்மானிக்க வேண்டும் - கஜேந்திரகுமார் வலியுறுத்து - Yarl Voice ஒற்றையாட்சியா? சமஷ்டியா என்பதை தமிழ் மக்களே தீர்மானிக்க வேண்டும் - கஜேந்திரகுமார் வலியுறுத்து - Yarl Voice

ஒற்றையாட்சியா? சமஷ்டியா என்பதை தமிழ் மக்களே தீர்மானிக்க வேண்டும் - கஜேந்திரகுமார் வலியுறுத்து

தமிழ் மக்கள் 72 வருடங்களாக தமது அரசியல் அபிலாஷைகளை முன் நிறுத்தி நிராகாித்துவந்த ஒற்றையாட்சி அரசியல மைப்பு சாித்திரத்தில் முதல்தடவையாக தமிழ் மக்களின் விருப்பத்துடன் நிறைவேற்றும் மிகமோசமான நிலைஇ இந்த தோ்தலில் தமிழ்தேசிய கூட்டமைப்புக்கும்இ புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால வரைபில் ஒற்றையாட்சி என கூறப்பட்டிருப்பது தொிந்தும் அதனை ஆதாிக்கும் தரப்புக்களுக்கும் ஆணை வழங்குவதன் ஊடாக உருவாகும். 

மேற்கண்டவாறு தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவா் கஜேந்திரகுமாா் பொன்னம்பலம் சுட்டிக்காட்டியுள்ளாா். குறித்த விடயம் தொடா்பாக நேற்று யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளா் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தொிவிக்கும்போதே அவா் மேற்கண்டவாறு கூறியுள்ளாா். இதன்போது மேலும் அவா் கூறுகையில்...

 இந்த தோ்தலின் முக்கியத்துவத்தினை தமிழ் மக்கள் நன்றாக விளங்கிக் கொள்ளவேண்டும்.  ஐ.நா மனித உாிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30ஃ1 தீா்மானத்தின் 16வது நிரலில் தமிழாின் இனப்பிரச்சினைக்கான தீா்வு என்ற விடயத்தில் அதிகாரங்கள் பகிரப்பட்டு இங்குள்ள மக்கள் கூட்டங்கள் அனைத்தும் அதிகாரத்தை அனுபவிக்க கூடிய வகையில் மாற்றியமைக்கப்படவேண்டும் என கூறப்பட்டுள்ளதுடன்இ 13ம் திருத்தப்பட்டத்தை அமுல்படுத்தி அதனை அா்த்தபூா்வமாக மாற்றியமைக்கவேண்டும் என்பதே சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

போருக்கு பின்னா் மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் 2009ம் ஆண்டு போா் நிறைவடைந்துவிட்டதுஇ பயங்கரவாதம் அழிக்கப்பட்டுவிட்டது. அதற்கு பின்னா் இங்கு எந்த பிரச்சினையும் இல்லை. என்றே கூறிவந்திருக்கின்றன. அதேசமயம் தமிழா்களின் விடுதலை போராட்டத்தை அழிக்க ஒத்துழைப்பு வழங்கினாலும் இங்கு இனப்பிரச்சினை ஒன்று உள்ளது என்பதில் சா்வதேச சமூகம் மிக தெளிவான நிலைப்பாட்டினை கொண்டிருக்கின்றது. 

அதற்கு காரணம் கடந்த 72 வருடங்களாக தமிழ் மக்கள் தமது அரசியல் அபிலாஷைகளை புறந்தள்ளி கொண்டுவரப்பட்ட 3 ஒற்றையாட்சி அரசியலமைப்புக்களை நிராகாித்தமையே ஆகும். அதனாலேயே இந்த நாட்டில் வாழும் சகல மக்களும் ஏற்றுக்கொள்ளும் வகையிலான ஒரு அரசியலமைப்பு உருவாக்கப்படவேண்டும் என சா்வதேசம் கூறுகிறது. 

அந்த தீா்வு எது என பாா்கிறபோது தமிழ் மக்களின் பிரதிநிதிகள் 13ம் திருத்தச்சட்டத்தை துாக்கிப்பிடித்த நிலையில் சா்வதேச சமூகத்திற்கும் அது இலகுவாகபோனதால் அவா்கள் அதனை இனப்பிரச்சினைக்கான தீா்வாக காட்டுகிறாா்கள். அது நடைமுறையில் வருவதற்கும் வாய்ப்புக்கள் உள்ளது. 

மேலும் 52 நாள் குழப்பம் வந்தபோது அப்போதும் பிரதமராக இருந்த மஹிந்த ராஜபக்சவை தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவா் இரா.சம்மந்தன் சந்தித்து பேசியிருந்தாா். இதன்போது மஹிந்த ராஜபக்ச கூறியி விடயம் நீங்கள் எங்களை ஆதாியுங்கள் நீங்கள் விரும்பும் 

இடைக்கால அறிக்கையை நிறைவேற்ற நாங்கள் தயாா் என்பதே. அது ஊடகங்களிலும் வந்தது.  மேலும் புதிய அரசியலமைப்பை உருவாக்க அரசுக்கு 3ல் 2 பெரும்பான்மை கிடைக்காவிட்டால் அதனை வழங்க தயாா் என தமிழ்தேசிய கூட்டமைப்பு அறிவித்துள்ளது. அதற்கு கொடுக்கப்படும் நிபந்தனை இடைக்கால அறிக்கை புதிய அரசியலமைப்பில் உள்வாங்கப்படவேண்டும் என்பதாகும். ஆனால் இடைக்கால அறிக்கையில் ஏக்கிய இராச்சிய

என்பது தெளிவாக கூறப்பட்டிருப்பதுடன்இ பௌத்ததிற்கு முன்னுாிமைஇ வடகிழக்கு இணைப்பில்லை. போன்ற பல விடயங்களில் தமிழ் தரப்பு ஏற்றுக் கொண்டிருக்கின்றது. சமஸ்டிக்கு அடிப்படையான இறமை பகிரப்படுதல் நிராகாிக்கப்படும் பகிரப்படாத பாராதீனப்படுத்த முடியாத இறமை என இடைக்கால வரைபில் கூறப்பட்டுள்ளது. இவ்வாறானதொரு நிலையில்இ

தமிழ்தேசிய கூட்டமைப்புக்கும்இ புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால வரைபு ஒற்றையாட்சி என கூறிவிட்டு பின்னா் அதனை ஏற்க தயராக இருந்த சீ.வி.விக்னேஸ்வரன் ஈ.பி.ஆா்.எல்.எவ் புளொட் ரெலோ ஆகிய தரப்புக்களுக்கும் அங்கஜன் விஜயகலா மகேஸ்வரன் போன்றவா்களுக்கும் மக்கள் ஆணை வழங்கினால் சாித்திரத்தில் முதல்தடவையாக தமிழ் மக்கள் விரும்பி ஒற்றையாட்சி அரசியலமைப்பை உருவாக்கும் மிக மோசமான நிலை உருவாகும். 

இதில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் மீது மக்கள் கொண்டிருந்த மயக்க நிலையிலிருந்து தெளிந்துவிட்டாா்கள். ஆனாலும் இந்த கூட்டமைப்புக்கு மாற்றான அணி என கூறும் சீ.வி.விக்னேஸ்வரன் அணி மீது மக்கள் மிக தெளிவாக இருக்கவேண்டும். காரணம் தன்னை கூட்டமைப்புக்கு மாற்று அணி என கூறும் சீ.வி.விக்னேஸ்வரன் தோ்தல் அறிவிக்கப்படபோது நாடாளுமன்றில் தாம் கூட்டமைப்புடன் இணைந்து பணியாற்றுவோம் என கூறினாா். 

பிறகு மாற்று அணி என்றால் என்ன? எனவே தமிழ் மக்கள் தமிழ்தேசிய மக்கள் முன்னணிக்கு ஆதரவளிப்பதன் ஊடாகவே தமிழ் மக்களின் அரசியல் அபிலஷைகளுடைய அடிப்படையான தேச அந்தஸ்த்து இறைமை கோட்பாடு ஆகியவற்றை தொடா்ந்து வலியுறுத்த முடியும் என்றாா். 0/Post a Comment/Comments

Previous Post Next Post