பெண்களின் எதிர்காலத்தை வளமாக்க எமக்கான ஆதரவை வழங்குங்கள் - வேட்பாளர் தீபிகா - Yarl Voice பெண்களின் எதிர்காலத்தை வளமாக்க எமக்கான ஆதரவை வழங்குங்கள் - வேட்பாளர் தீபிகா - Yarl Voice

பெண்களின் எதிர்காலத்தை வளமாக்க எமக்கான ஆதரவை வழங்குங்கள் - வேட்பாளர் தீபிகா

எமது மக்களின் எதிர்கால வாழ்வை வளமாக்க எமக்கான ஆதரவை அனைத்து மக்களும் வழங்க வேண்டுமென யாழ்  தேர்தல் தொகுதியில் களமிறங்கியுள்ள பெண் வேட்பாளர் தீபிகா உமாமகேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவின் ஐனநாயக இடதுசாரி முன்னணியின் சார்பில் யாழ் மாவட்டத்தில் களமிறங்கியுள்ள வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று யாழ் நகரில் வெளியிட்டு வைக்கப்பட்டது. 

இவ் விஞ்ஞாபன வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன் போது அவர் மேலும் தெரிவித்ததாவது..

அமைச்சர் வாசுதேவ நாணயக்கார அனைத்து மக்களின் பிரச்சனைகளையும் தேவைகளையும் நன்கு அறிந்தவர். ஆவற்றை தீர்த்து வைக்கின்ற பல்வேறு பணிகளை தொடர்ச்சியாக ஆற்றி வருகின்றார். 

ஆகையினால் அவரது கட்சியில் இணைந்து எமது மக்களுக்கு என்னாலான சேவைகளை வழங்குவதற்காகவே இத் தேர்தலில் நாங்கள் களமிறங்கி இருக்கின்றோம்.

எமது மக்கள் நாளாந்தம் பல்வேறு பிரச்சனைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். ஆந்தப் பிரச்சனைகளுக்கான தீர்வை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது மிக மிக அவசியமானது. 

குறிப்பாக யாழ்ப்பாணம் கிளிநொச்சி உட்பட வடக்கு கிழக்கில் பல ஆயிரக்கணக்கான பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் பல்வேறு கஸ்ர துன்பங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

அதே போன்று எமது இளைய சமூகத்தினரும் தொழில் வாய்ப்புக்கள் இல்லாமல் பல பாதிப்புக்களை எதிர்நோக்கி வருகின்றனர். மேலும் எமது கலை கலாச்சார பாரம்பரிய பண்பாட்டு விழுமியங்களும் பாதுகாக்கப்பட வேண்டும். எதிர்சாலச் சந்திதியினரின் எதிர்காலம் மிக மிக முக்கியமானது.

ஆகவே எமது சமூகம் எதிர்நோக்கி வருகின்ற பிரச்சனைகளுக்கு  தீர்வைக் காண வேண்டும். இதற்கு எமது கட்சிக்கு அனைவரும் ஆதரவை வழங்க வேண்டுமென்று கோருகின்றோம். 

ஆவ்வாறு மக்கள் ஆதரவு வழங்கினால் அவர்களது அனைத்துப் பிரச்சனைகளையும் தீர்த்து வைக்க நாம் தொடர்ந்தும் உழைப்போம் என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post