தமிழ் மக்களுக்கு ஏற்படப்போகும் ஆபத்து குறித்து விக்கினேஸ்வரன் விடுத்துள்ள எச்சரிக்கை - Yarl Voice தமிழ் மக்களுக்கு ஏற்படப்போகும் ஆபத்து குறித்து விக்கினேஸ்வரன் விடுத்துள்ள எச்சரிக்கை - Yarl Voice

தமிழ் மக்களுக்கு ஏற்படப்போகும் ஆபத்து குறித்து விக்கினேஸ்வரன் விடுத்துள்ள எச்சரிக்கை

இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் ஊடாக வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு மட்டுமே மாகாண சபை பற்றிக் கூறப்பட்டதே ஒழிய ஏனைய மாகாணங்களுக்கு மாகாண சபை முறைமைகள் தேவை எனக்கூறப்படவில்லை.

ஆகவே மாகாண சபை தேவையில்லை என்று சொல்லும் போது சிங்கள மக்கள் ஆம் என்றே ஏற்றுக்கொள்வார்கள் எனத் தெரிவித்துள்ள தமிழ் மக்கள் தேசியக் கட்சியின் தலைவர் சி.வி.விக்கினேஸ்வரன் சகல அதிகாரங்களையும் ராஜபக்ச அரசின் கைகளில் கொடுப்பீர்களானால் நாட்டில் சர்வதிகாரம் கட்டாயமாக முன்னெடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் நல்லூர் வீதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இன்று ஊடகங்களைச் சந்தித்து கருத்துக்கள் வெ ளியிடும் போது அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்

தற்பேதைய ஆட்சியில் இருப்பவர்கள் 19 ஆவது திருத்தச் சட்டத்தை இல்லாது ஒழிக்கவேண்டும் என்பது முக்கிய நோக்கமாக கொண்டிருக்கின்றார்கள். முன்னர் இருந்து அதிகாரங்கள் இந்தச் சட்டமூலம் உடாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனபோன்று தான்தோன்றித்தனமான ஜனாதிபதி ஆட்சிமுறையைக் கொண்டுவருவதற்கு முயற்சிக்கின்றார்.

இதனை சிங்கள மக்களுக்குச் செல்லும் போது மாகாண சபையை நீக்கி 13 ஆம் திருத்தச் சட்டத்தை நீக்கி சிங்கள மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொள்வதற்காக முயற்சிக்கின்றனர். இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் ஊடாக வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு மட்டுமே மாகாண சபை பற்றிக் கூறப்பட்டதே ஒழிய ஏனைய மாகாணங்களுக்கு மாகாண சபை முறைமைகள் தேவை எனக்கூறப்படவில்லை.

ஆகவே மாகாண சபை தேவையில்லை என்று சொல்லும் போது சிங்கள மக்கள் ஆம் என்றே ஏற்றுக்கொள்வார்கள் ஆனால் எமக்கு மாகாண சபைகள் ஊடாக தரப்பட்ட அதிகாரங்கள் போதாது ஒன்றையாட்சி அரசியல் அமைப்பு முறை இருக்கும் வரை மாகாண சபை அதிகாரத்தின் ஊடாக கொண்டு நடத்த முடியாது என்பதாலேயே சமஷ்டி ஆட்சி முறையைக் கோரி வருகின்றோம்.

 ஆகவே இவ்வாறான கருத்துக்கள் பிரதரால் ஜனாதிபதியினால் வெ ளிப்படுத்தப்பட்டால் அது சிங்கள மக்களின் வாக்குகளை பெறுவதவதற்காகத்தான் என்று அர்த்தம் ஆனால் வருங்காலத்ில் என்ன செய்யப்போகின்றார்கள் என்றுதெரியவில்லை. 

மக்கள் பயப்படுகின்றது என்னவென்றால் இவர்களுக்கு சகல அதிகாரங்களையும் கொடுப்பீர்களானால் நாட்டின் ஒரு சர்வதிகாரம் கட்டாயமாக முன்னெடுக்கப்படும் என்று எல்லோரும் கருத்துத் தெரிவித்திருக்கின்றார்கள்.

தற்போது உள் நாட்டிலும் வெ ளிநாடகளிலும் இதனைத்தான் கூறின்றார்கள். எப்படி இருக்கும் என்று தெரியாது தற்போது 13 19 தான் அவர்களின் அதிகாரத்தை குறைத்து வைத்துக்கொண்டிருக்கின்றது. 

இதனை நீக்கிவிட்டால் முன்னைய ஜனாதிபதிகள் போன்று மழுமையான அதிகாரத்தையும் பெற்று ஒரு இராணுவத்தில் இருந்து இராணுவத்தை வழிநடத்திய ஒருவர் அந்த இடத்தில் இருந்தல் ஒரு சர்வதிகாரமுள்ள அரசாகத்தான் இருக்கும் என்பதில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் இருக்கமுடியாது என்றார்.


0/Post a Comment/Comments

Previous Post Next Post