விடுதலைப் புலிகள் மீளுருவாக்கம் - சிவாஜிலிங்கத்திற்கு நீதிமன்றம் விடுத்துள்ள அழைப்பானை - Yarl Voice விடுதலைப் புலிகள் மீளுருவாக்கம் - சிவாஜிலிங்கத்திற்கு நீதிமன்றம் விடுத்துள்ள அழைப்பானை - Yarl Voice

விடுதலைப் புலிகள் மீளுருவாக்கம் - சிவாஜிலிங்கத்திற்கு நீதிமன்றம் விடுத்துள்ள அழைப்பானை

தமிழ்த் மக்கள் தேசிய கூட்டணியின் யாழ் தேர்தல் தொகுதி வேட்பாளரான எம்.கே.சிவாஐpலிங்கத்திற்கு மல்லாகம் நீதிமன்றம் அழைப்பானை விடுத்துள்ளது.

நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலய படுகொலை நினைவேந்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில் அங்கு சிவாஐpலிங்கம் மக்களைத் திரட்டி போராட்டம் செய்யப் போவதாவும் அது பொது மக்கள் பாதுகாப்பிற்குள் குந்தகம் விளைவிக்குமென்றும்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீள் உருவாக்கம் செய்யும் நடவடிக்கைளை சிவாஐpலிங்கம் மேற்கொள்கிறார் என்ற பல குற்றச்சாட்டுக்களை உள்ளடக்கி மானிப்பாய் பொலிஸாரால் நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

அதாவது குறித்த நிகழ்வை தடை செய்யுமாறும் நீதிமன்றில் பொலிஸாரால் கோரப்பட்டிருந்த நிலையிலையே அது குறித்து ஆராய்வதற்காக இன்றையதினம் நீதிமன்றுக்கு சிவாஐpலிங்கம் அழைக்கப்பட்டுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post