யாழ் மாநகரத்தை சுத்தப்படுத்தும் செயற்திட்டத்தை ஆரம்பிக்கும் இரானுவம் - Yarl Voice யாழ் மாநகரத்தை சுத்தப்படுத்தும் செயற்திட்டத்தை ஆரம்பிக்கும் இரானுவம் - Yarl Voice

யாழ் மாநகரத்தை சுத்தப்படுத்தும் செயற்திட்டத்தை ஆரம்பிக்கும் இரானுவம்

யாழ்ப்பாணம் மாநகரில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி சுற்றுச்சூழலை சுத்தப்படுத்தும் பணி எதிர்வரும் 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் முன்னெடுக்கப்படவுள்ளது.

யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் வணிகசூரிய தலைமையில் 250 படையினரின் பங்களிப்புடன் இந்த யாழ்.மாநகரை தூய்மைப்படுத்தும் பணி முன்னெடுக்கப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு ஆரம்பமாகும் பணி காலை 9 மணிக்கு யாழ்ப்பாணம் கோட்டைக்கு முன்பாக இடம்பெறும் பிரதான நிகழ்வுடன் நிறைவுபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாநகரில் தெரிவுசெய்யப்பட்ட 9 பிரதான வீதிகள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தும் பொது இடங்களில் பிளாஸ்டிக்இ பொலித்தீன் கழிவுப்பொருள்களை அகற்றி நகரைச் சுத்தப்படுத்தும் நோக்குடன் இந்தப் பணி சுழற்சிமுறையில் முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post