சிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் ஒத்திவைப்பு: கிரிக்கெட் அவுஸ்ரேலியா அறிவிப்பு - Yarl Voice சிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் ஒத்திவைப்பு: கிரிக்கெட் அவுஸ்ரேலியா அறிவிப்பு - Yarl Voice

சிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் ஒத்திவைப்பு: கிரிக்கெட் அவுஸ்ரேலியா அறிவிப்பு

சிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக, கிரிக்கெட் அவுஸ்ரேலியா அறிவித்துள்ளது.

எதிர்வரும் ஒகஸ்ட் மாதத்தில் நடைபெறவிருந்த குறித்த ஒருநாள் கிரிக்கெட் தொடர், கொவிட்-19 வைரஸ் காரணமாக திகதிகள் அறிவிக்கப்படாமலேயே ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கிரிக்கெட் அவுஸ்ரேலியா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘குறுகிய காலத்தைக்கொண்ட தொடர் என்ற போதிலும், அரசாங்கம் விதித்துள்ள சுகாதார நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

அத்துடன் வீரர்கள் மற்றும் அதிகாரிகளின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு தனிமைப்படுத்த வேண்டிய நிபந்தனைகளையும் கிரிக்கெட் அவுஸ்ரேலியா மேற்கொள்ள வேண்டும். எனவே, இந்த தொடர் ஒத்திவைக்கப்படுகின்றது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது, மீண்டும் மற்றுமொரு அட்டவணையின் ஊடாக தொடரை மீண்டும் நடத்துவதற்கு இரண்டு கிரிக்கெட் சபைகளும் நடவடிக்கை எடுத்துவருவதாக தெரிவிக்கப்படுகிறது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post