100 கோடிக்கு மாஸ்டர்? எகிறும் எதிர்பார்ப்பு? - Yarl Voice 100 கோடிக்கு மாஸ்டர்? எகிறும் எதிர்பார்ப்பு? - Yarl Voice

100 கோடிக்கு மாஸ்டர்? எகிறும் எதிர்பார்ப்பு?

கொரோனா ஊரடங்கு காரணமாக இந்தியாவில்  5 மாதங்களுக்கு மேல் திரையரங்குகளை மூடி வைத்து இருப்பதால் தயாரிப்பாளர்கள் பார்வை ஓ.டி.டி. தளங்கள் பக்கம் திரும்பி உள்ளன. 

புதிய படங்களை திரையரங்குக்கு பதிலாக நேரடியாக இணைய தளங்களில் ரிலீஸ் செய்கிறார்கள்.  ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள். கீர்த்தி சுரேசின் பெண்குயின்இ வரலட்சுமியின் டேனிஇ வைபவ்வின் லாக்கப் ஆகிய படங்கள் ஓ.டி.டி.யில் வெளியிடப்பட்டன. 

அடுத்து சூர்யாவின் சூரரை போற்று படமும் இணைய தளத்தில் வெளியாகிறது. இந்த படத்தை ரூ.60 கோடி செலவில் எடுத்ததாகவும் அதே தொகைக்கு ஓ.டி.டி.தளத்துக்கு விற்று இருப்பதாகவும் மேலும் சாட்டிலைட் மற்றும் ஹிந்தி டப்பிங் உரிமை ரூ.40 கோடிக்கு விலைபோனதாகவும் மொத்தம் ரூ.100 கோடிக்கு வியாபாரம் ஆகி உள்ளதாகவும் இணைய தளங்களில் தகவல் பரவி வருகிறது. 

இந்த நிலையில் விஜய்யின் மாஸ்டர் படத்தை வாங்கவும் முன்னணி ஓ.டி.டி தளங்கள் ரூ.70 கோடியில் இருந்து ரூ.100 கோடி வரை போட்டி போட்டு விலை பேசுவதாக இணைய தளங்களில் தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

தியேட்டர் அதிபர்களோ திரையரங்குகள் திறந்ததும் முதல் படமாக மாஸ்டரை திரையிட்டு ரசிகர்களை மீண்டும் திரையரங்குக்கு இழுக்கும் திட்டத்தில் இருக்கிறார்கள். மாஸ்டர் ஓ.டி.டியில் வெளியாவதை படக்குழுவினர் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

0/Post a Comment/Comments

Previous Post Next Post