சீதை வேடத்தில் கீர்த்தி சுரேஸ்? - Yarl Voice சீதை வேடத்தில் கீர்த்தி சுரேஸ்? - Yarl Voice

சீதை வேடத்தில் கீர்த்தி சுரேஸ்?

பாகுபலியில் பிரபலமான பிரபாஸ் அடுத்து ராமாயணம் கதையில் நடிக்கிறார். படத்துக்கு ஆதிபுருஷ் என்று பெயர் வைத்துள்ளனர். 

3டி தொழில் நுட்பத்தில் இந்திஇ தெலுங்கு மொழிகளில் தயாரித்து தமிழ்இ மலையாளம்இ கன்னடம் மொழிகளிலும் வெளியிடுகின்றனர். ராமர் கதாபாத்திரத்தில் பிரபாஸ் நடிக்கிறார்.

இந்த படம் குறித்து இயக்குநர் நாக் அஸ்வின் கூறும்போதுஇ 'ஆதிபுருஷ் படம் ராமாயணத்தை மையமாக வைத்து உருவாகிறது. கடவுள் ராமராக பிரபாஸை பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. சில நடிகர்கள்தான் இதற்கு முன்னால் ராமராக நடித்துள்ளனர்' என்றார். 

இந்த படத்தின் பட்ஜெட் ரூ.500 கோடி ரூபாய் என்றும் கிராபிக்ஸ் காட்சிகளுக்கு மட்டும் ரூ.250 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதற்காக ஹொலிவுட் நிறுவனங்களுடன் பேசி வருகின்றனர். அடுத்த வருடம் படப்பிடிப்பை தொடங்கி 2022-ல் திரைக்கு கொண்டு வருகிறார்கள்.

வில்லத்தனமான ராவணன் கதாபாத்திரத்தில் நடிக்க சயீப் அலிகான்இ ராணா ஆகியோர் பரிசீலிக்கப்படுகின்றனர். 

சீதை வேடத்தில் நடிக்க கீர்த்தி சுரேசிடம் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் ஏற்கனவே நடிகையர் திலகம் படத்தில் மறைந்த நடிகை சாவித்திரி வேடத்தில் நடித்து பாராட்டு பெற்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post