ஐ.பி.எல். ரி-20 கிரிக்கெட் தொடரை நடத்த அனுமதி - Yarl Voice ஐ.பி.எல். ரி-20 கிரிக்கெட் தொடரை நடத்த அனுமதி - Yarl Voice

ஐ.பி.எல். ரி-20 கிரிக்கெட் தொடரை நடத்த அனுமதி

ஐ.பி.எல். ரி-20 கிரிக்கெட் தொடரை நடத்த மத்திய அரசாங்கத்திடமிருந்து அதிகாரப்பூர்வமாக அனுமதி கிடைத்துள்ளதாக ஐ.பி.எல். தலைவர் பிரிஜேஷ் படேல் தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் கிரிக்கெட் தொடரை நடத்த மத்திய உட்துறைஇ வெளியுறவுத் துறை மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகங்களின் அனுமதி தேவை.

இந்தநிலையில் மத்திய உட்துறை மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சகங்களிடமிருந்து அதிகாரப்பூர்வமாக அனுமதி கிடைத்துள்ளதாக பிரிஜேஷ் படேல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்இ 'மத்திய உட்துறை அமைச்சகம் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சகம் ஆகியவற்றிடம் இருந்து முறையான எழுத்துப்பூர்வ அனுமதியை இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை பெற்றுள்ளது.

தற்போது நாங்கள் எழுத்துப்பூர்வமாக அனுமதி பெற்றுள்ளோம். ஆகவேஇ ஐ.பி.எல் அணிகள் எல்லாவிதமான உத்தரவுகளையும் பிறப்பிக்க முடியும்' என கூறினார்.

13ஆவது ஐ.பி.எல். ரி-20 தொடர்இ ஐக்கிய அரபு அமீரகத்தில் ஷார்ஜாஇ அபுதாபிஇ டுபாய் ஆகிய நகரங்களில் செப்டம்பர் 19ஆம் திகதி முதல் நவம்பர் 10ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post