கொரோனோ தடுப்பு நடவடிக்கைகள் வெற்றி என்கிறார் பிரதமர் மோடி - Yarl Voice கொரோனோ தடுப்பு நடவடிக்கைகள் வெற்றி என்கிறார் பிரதமர் மோடி - Yarl Voice

கொரோனோ தடுப்பு நடவடிக்கைகள் வெற்றி என்கிறார் பிரதமர் மோடி


இறப்பு எண்ணிக்கை குறைவடைந்து குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரிப்பது கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் சரியான திசையில் செல்வதை காட்டுகிறது என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நோய் பரவல் அதிகம் உள்ள தமிழகம் ஆந்திரா கர்நாடகம் டெல்லி உத்திர பிரதேசம் மேற்கு வங்கம் தெலுங்கானா குஜராத் பீகார் மாநில முதல்வர்களுடன் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை பிரதமர் மோடி காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.

இதன்போது பிரதமர் மோடி கருத்து வெளியிடுகையில் 'இறப்பு எண்ணிக்கை குறைவடைந்து குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரிப்பது கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் சரியான திசையில் செல்வதை காட்டுகிறது.

சுகாதார பணியாளர்கள் ஒவ்வொரு நாளும் புதிய சவால்களை எதிர்கொள்கின்றனர். கொரோனா பரவல் நேரம் ஒடிக்கொண்டிருக்கிறது. புதிய சூழலும் உருவாகிறது.

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் மாநிலங்களின் பங்கு இன்றியமையாதது. ஒவ்வொரு மாநிலமும் போராடி வருகிறது.

கொரோனா பாதிப்பு எண்ணிக்கையைவிட குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதிகம் பாதித்த மாநிலங்கள் பேசும் போது தடுப்பு பணிகள் வலுவடையும். நம்பிக்கை அதிகரித்து அச்சம் குறைகிறது. பாதிப்பு குறைவது நம் முயற்சிக்கு கிடைத்த வெற்றி' என மேலும் தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post