500 மில்லியன் நஷ்ர ஈடு கோரும் மகிந்தவின் புதல்வன் யோசித - Yarl Voice 500 மில்லியன் நஷ்ர ஈடு கோரும் மகிந்தவின் புதல்வன் யோசித - Yarl Voice

500 மில்லியன் நஷ்ர ஈடு கோரும் மகிந்தவின் புதல்வன் யோசித

உலக மரபுரிமையான சிங்கராஜ வனத்தில் தான் ஹோட்டல் ஒன்றை நிர்மாணிப்பதாக கருத்து வெளியிட்டுள்ள சுற்றாடல் ஆர்வலரான சஜீவ சாம்கரவிடமிருந்து 500 மில்லியன் ரூபாய் நட்டஈடு கோரி கட்டளை ஆணை அனுப்பியுள்ளதாக யோஷித ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

சஜீவ சாம்கர வெளியிட்டுள்ள இந்த போலி கருத்து தொடர்பில் தனது தரப்புவாதியான  யோஷித ராஜபக்‌ஷவிடம் அவர் நிபந்தனையற்ற மன்னிப்பை கோர வேண்டும் என்றும் குறித்த செய்தியை வெளியிட்டுள்ள ஊடக நிறுவனங்களும் இதனை அகற்ற வேண்டும் என  யோஷித சார்பில் சட்டத்தரணிகள்  நிறுவனம் தெரிவித்துள்ளது.

அவ்வாறு நட்டஈடு வழங்காவிடின் 7 நாள்களுக்குள் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாகவும் சட்டத்தரணிகள்  நிறுவனம் தெரிவித்துள்ளது

0/Post a Comment/Comments

Previous Post Next Post