யாழில் குறைவடைந்த மது பாவனை - மதுவரித் திணைக்களம் தகவல் - Yarl Voice யாழில் குறைவடைந்த மது பாவனை - மதுவரித் திணைக்களம் தகவல் - Yarl Voice

யாழில் குறைவடைந்த மது பாவனை - மதுவரித் திணைக்களம் தகவல்

யாழ்ப்பாணமதுவரித் திணைக்களத்தின் ஆளுகைக்குட்பட்ட யாழ்ப்பாணம் நல்லூர் வேலணை ஆகிய பகுதிகளில் கடந்த 2019 ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது இவ்வருடம் கடந்த ஆறு மாதம் வரையிலான புள்ளிவிபரங்களின்படி பியர் நுகர்வு  27 வீதமாக குறைவடைந்துள்ளதாக யாழ்ப்பாண மதுவரி திணைக்கள புள்ளிவிபர தகவல்கள் தெரிவிக்கின்றன
 
கடந்த 2019ம் ஆண்டு 21 லட்சத்துக்கு மேற்பட்ட லீட்டர் பியர் விற்பனை இடம்பெற்றதாகவும் எனினும் இவ்வருடம் கடந்த ஆறு மாத புள்ளிவிவரங்களின்படி  7லட்சத்து 42 ஆயிரம்லீட்டர்பியர் நுகர்வு மட்டுமே இடம்பெற்றுள்ளதாகவும் யாழ்ப்பாண மதுவரி திணைக்கள புள்ளிவிபரதகவல்கள் தெரிவிக்கின்றன

 அத்தோடு வைன் நுகர்வு கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது  21மூ த்தால் குறைவடைந்துள்ளதோடு அதேபோல் வெளிநாட்டு சாராய நுகர்வும் 1.74 வீதத்தினால் குறைவடைந்துள்ளது உள்ளூர் சாராய பாவனை 2.6 வீதமாக அதிகரித்துள்ளது 

மேலும் யாழ்ப்பாணம் நல்லூர் வேலணை ஆகிய பகுதிகளில் யாழ்ப்பான மதுவரித் திணைக்களத்தின் ஆளுகையின் கீழ் 13 சில்லறை மதுபான விற்பனை நிலையங்களும் 5 ஹோட்டல் விற்பனை நிலையங்களும் 6 ரெஸ்டூரண்ட் விற்பனை நிலையங்களும் காணப்படுவதாகவும் எனினும் கடந்த வருடத்தோடு ஒப்பிடும் போது இவ்வருடத்தில் கடந்த ஆறு மாதம் வரையிலான புள்ளிவிபரங்களின்படி பியர்  பாவனை குறைவடைந்து ள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன .

0/Post a Comment/Comments

Previous Post Next Post