கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் ஆசனம் குறித்து சுமந்திரன் வெளியிட்டுள்ள அறிவிப்பு - Yarl Voice கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் ஆசனம் குறித்து சுமந்திரன் வெளியிட்டுள்ள அறிவிப்பு - Yarl Voice

கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் ஆசனம் குறித்து சுமந்திரன் வெளியிட்டுள்ள அறிவிப்பு

தமிழரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் தொடர்பான அறிவிப்பு முடிவு செய்யப்பட்டு விட்டது. அதில் எந்தவிதமான இழுபறிகளும் இல்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ,சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சிக்கு ஒரு தேசியப் பட்டியல் ஆசனம் வழங்கப்பட்டது. அந்த ஆசனத்தை வழங்குவது தொடர்பில் கட்சிக்குள் பல விதமான கருத்துக்கள் ஏற்பட்டிருக்கின்றன.

இந் நிலையில் அதனை அம்பாறை மாவட்டத்தின் உறுப்பினரான கலையரசனிற்கு வழங்குவதாக கட்சியின் செயலாளர் அறிவித்திருந்தார். தற்போது வர்த்தமானியிலும் கலையரசனின் பெயர் வெளியிடப்பட்டுள்ளது.

ஆனாலும் கட்சிக்குள்ளும் கூட்டமைப்பிற்குள்ளும் இந்த ஆசனம் வழங்குவது தொடர்பான சர்ச்சைகள் தொடர்ந்தும் நீடித்து வருகின்ற நிலைமையில் தேசியப் பட்டிய்ல் தொடர்பான அறிவிப்பு முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் இழுபறிகள் இல்லை என்றும் அக் கட்சியின் பேச்சாளர் சுமந்திரன் தெரிவித்திருக்கின்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post