யாழ் ஆயரைச் சந்தித்து ஆசி பெற்றுக் கொண்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி - Yarl Voice யாழ் ஆயரைச் சந்தித்து ஆசி பெற்றுக் கொண்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி - Yarl Voice

யாழ் ஆயரைச் சந்தித்து ஆசி பெற்றுக் கொண்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் மதத் தலைவர்களைச் சந்தித்து ஆசிர்வாதம் பெற்று வருகின்றனர்.

இதற்கமைய முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கயேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான இக் குழுவினர் யாழ் ஆயர் ஐஸ்ரின் ஞர்னப்பிரகாசம் ஆண்டகையை சந்தித்து ஆசீர் வாதம் பெற்றுள்ளனர்.

யாழ் ஆயர் இல்லத்தில் இன்று காலை இடம்பெற்ற இச் சந்திப்பில் ஆயரிடம் ஆசீர்வாதத்தைப் பெற்றுக் கொண்ட முன்னணியினர் சமகால மற்றும் எதிர்கால அரசியல் நிலைமைகள் குறித்தும் கலந்துரையாடியிருந்தனர். 

இச் சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினரான செல்வராசா கயேந்திரன் உள்ளிட்ட கட்சியின் சட்ட ஆலோசகர்களான கனகரட்னம் சுகாஷ் மற்றும் நடராசா காண்டிபன் மற்றும் கட்சியின் உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர். 

இதே வேளை நேற்றையதினம் நல்லை ஆதீனத்திற்குச் சென்ற மேற்படி முன்னணியின் குழுவினர் நல்லை ஆதீனக் குரு முதல்வரைச் சந்தித்து ஆசீர்வாதத்தைப் பெற்றுக் கொண்டதுடன் சமகால நிலைமைகள் தொடர்பிலும் கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

0/Post a Comment/Comments

Previous Post Next Post