காசநோய் விழிப்புணர்வு அதிகரிக்கப்பட வேண்டும் - மருத்துவர் யமுனானந்தா வலியுறுத்து - Yarl Voice காசநோய் விழிப்புணர்வு அதிகரிக்கப்பட வேண்டும் - மருத்துவர் யமுனானந்தா வலியுறுத்து - Yarl Voice

காசநோய் விழிப்புணர்வு அதிகரிக்கப்பட வேண்டும் - மருத்துவர் யமுனானந்தா வலியுறுத்து


காசநோய் விழிப்புணர்வு அதிகரிக்கப்பட வேண்டுமென மருத்துவர் யமுனானந்தா தெரிவித்துள்ளார்.

காச நோய், எயிட்ஸ் நோய், மலேரியா நோய் என்பனவற்றின் கட்டுப்பாட்டினை ஒன்றிணைத்து கோவிட் நோய்க்குரிய தடுப்புக்கான வளங்களையும் இணைத்து செயற்பட வேண்டிய சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது. 

ஏனைனில் பொருளாதாரத் தேக்க நிலை சர்வதேச ரீதியில் இந் நோய்களை கட்டுப்படுத்துவதற்கு கிடைக்கப்பெற்ற வளங்களில்  எற்பட்ட ஸ்தம்பித நிலை என்பன நீண்ட கால அடிப்படையில் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. 

கோவிட் தாக்கம் ஆபிரிக்கா, ஆசியா, இலத்தீன் அமெரிக்காவில் அதிகம் ஏற்பட்டுள்ளது. இதன் பாதிப்பினால் கூடுதலாக வறிய மக்களே அதிகம் பாதிப்பிற்கு ஆளாகிடுவர். இதனால் காசநோய்த் தாக்கமும் அதிகரிக்கும் மேலும் இவ் வருடம் இந்தியாவில் காசநோயினை கண்டறியும் செயற்பாடு 75மூ ஆகக் குறைந்துள்ளது. 

இந்தோனேசியாவில் காச நோயினைக் கண்டறியும் செயற்பாடு 70 மூ ஆகக் குறைவடைந்துள்ளது. எனவே கோவிட் நோயின் போது தனிமைப்படுத்தலை ஆலோசனையாகக் கூறும் சூழலில் காச நோயின் போது இரு கிழமைகளுக்கு மேல் இருமல் காணப்படின் சளிப் பரிசோதனை செய்யப்படல் வேண்டும், 

என்ற ஆலோசனையை மக்களுக்கு கூறுதலும் காசநோயின் ஏனைய அறிகுறிகளான மாலை நேரக் காய்ச்சல், உடல் மெலிதல், சளியுடன் இரத்தம் வெளிவரல், உணவில் விருப்பம் இன்மை  என்பன காணப்படும் என்பதனையும் தெரியப்படுத்தி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துதலும் மிகவும் அவசியமானவையாகும். 

மேலும் அரச வைத்தியசாலைகளிலும் தனியார் வைத்தியசாலைகளிலும் காச நோய்ச் சிகிச்சைக்கு முன்னுரிமை அளிக்கப்படல் வேண்டும்.



0/Post a Comment/Comments

Previous Post Next Post