இனவாதிகள் வரலாறைத் தெரிந்து கொள்ள வேண்டும் - சுரேஸ்பிரேமச்சந்திரன் - Yarl Voice இனவாதிகள் வரலாறைத் தெரிந்து கொள்ள வேண்டும் - சுரேஸ்பிரேமச்சந்திரன் - Yarl Voice

இனவாதிகள் வரலாறைத் தெரிந்து கொள்ள வேண்டும் - சுரேஸ்பிரேமச்சந்திரன்


வரலாறை மறைக்க முடியாது. உண்மைகள் வெளி வருவதை ஏற்றுக் கொள்ள வேண்டும். அதற்காக இனவாத ரீதியான செயற்பாடுகள் கருத்துக்கள் முன்னெடுக்க முடியாது 

கண்டியை ஆட்சி செய்த கடைசி மன்னன் சிறி விக்கிரம ராஜசிங்கன் கடைசியாக கையொப்பம் இட்டது தமிழிலேயே எனவும் இன்றும் தலதா மாளிகையில் அதனை பார்க்க முடியும் எனவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்தினர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு ஒல்லாந்தர் இலங்கைக்கு வந்த காலத்தில் இலங்கையில் நீதிமன்ற மொழியாக தமிழே காணப்பட்டதாகவும்இ சிங்களம் வளர்ச்சி அடையாத மொழியாகவே இருந்தது எனவும் சுரேஸ் பிறேமச்சந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருந்து தெரிவிக்கும் போதே சுரேஸ் பிறேமச்சந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன் போது அவர் மேலும் தெரிவித்ததாவது..

பாராளுமன்றத்தில் விக்கினேஸ்வரன் ஆற்றிய உரை குறித்து தெற்கில் இனவாத பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுகிறது. தமிழ் மக்களின் வரலாறுகளையும் உண்மைகளையுமே அவர் பேசியிருக்கின்றார். 

ஆனால் அதனை ஏற்றுக் கொள்வதற்கு தெற்கிலுள்ளவர்கள் தயாரில்லை. அதனாலேயே இனவீத ரீதியான பிரச்சாரங்களை அவர்கள் முன்னெடுத்து வருகின்றனர். ஆகவே வரலாறுகள் மறைக்கப்பட முடியாது என்பதுடன் உண்மைகளை அனைவரும ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும்என்றீர.

மேலும் காணாமல் போனோர் விடயத்தில் அரச தரப்பினர் உரிய நடவடிக்கைகளை எடுக்காத இதே நேரத்தில் நையாண்டி பண்ணுவது  ஏளனம் செய்வது போன்ற கருத்துக்களை வெளிப்படுத்தி வருகுன்றனர்.

குறிப்பாக காணாமல் போனவர்கள் யாருமில்லைஇ வெளிநாடுகளுக்கு போயிருக்கலாம் என்ற வகையில் அமைச்சர் கெகலிய கூறியிருக்கின்றார். கையளித்தவர்களைநும் சரண்டைந்தவர்களையுமே கேட்கிறோம். எங்கிடம் ஒப்படைக்கப்பட்டவர்கள் எங்கே என்று தானே உறவினர்கள் போராடி வருகினறனர். அவர்களுக்கு பதுல் கூறுவது மட்டுமல்ல நிதி கிடைக்க வேண்டும்.

இதனை வலியுறுத்தி எதிர்வரும் 39 ஆம் திகதி வடக்கு கிழக்கில் போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது. இந்தப் போராட்டத் திற்கு நாமும் ஆதரவை வழங்குவதுடன் அனைவரையும் கலந்து கொள்ளுமாறும் அழைப்பு விடுக்கின்றோம் என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post