கூட்டமைப்பிற்குள் மீண்டும் பிளவு - நாடாளுமன்றில் ரெலோ புளொட் தனித்து இயங்க முடிவு? - Yarl Voice கூட்டமைப்பிற்குள் மீண்டும் பிளவு - நாடாளுமன்றில் ரெலோ புளொட் தனித்து இயங்க முடிவு? - Yarl Voice

கூட்டமைப்பிற்குள் மீண்டும் பிளவு - நாடாளுமன்றில் ரெலோ புளொட் தனித்து இயங்க முடிவு?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான ரெலோ மற்றும் புளொட் நாடாளுமன்றில் தனித்து இயங்குவதற்கு தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் ஆசனம் தொடர்பில் கூட்டமைப்பின் பங்காளிகளுக்கிடையில் ஏற்பட்ட முரண்பாடுகளையடுத்து பேச்சாளர் மற்றும் தலைமையிலி மாற்றம் ஏற்படுத்த வேண்டுமென ரெலோ தெரிவித்திருந்தது.

இந் நிலையில் கூட்டமைப்பின் பேச்சாளர் பதவியை ரெலோ மற்றும் புளொட் ஆகிய இரண்டு பங்காளிகளில் ஒரு தரப்பிற்கு வழங்க வேண்டுமென பங்காளிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந் நிலையில் கூட்டமைப்பின் நடாளுமன்றக் குழுக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. அதில் பேச்சாளர் மாற்றும் எனம் தீர்மானம் எடுக்கப்படாத விட்டால் நாடாளுமன்றில் ரெலோ புளொட் தனித்து இயங்குவதற்கு தீர்மானித்திருக்கிறது. மேலும் தனித்து இயங்குவது தொடர்பில் நடாளுமன்றில் சபாநாயகருக்கும் இன்றெ அறிவிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

0/Post a Comment/Comments

Previous Post Next Post