ஊடகவியியலாளர்களுக்கு கடற்படை அச்சுறுத்தல் - Yarl Voice ஊடகவியியலாளர்களுக்கு கடற்படை அச்சுறுத்தல் - Yarl Voice

ஊடகவியியலாளர்களுக்கு கடற்படை அச்சுறுத்தல்

கடற்படையினருக்கு காணி சுவீகரிக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த மக்களுக்கும் அங்கு நின்றிருந்த ஊடகவியியலாளர்களுக்கும் கடற்படையினர் மற்றும் புலனாய்வாளர்களால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாதகல் துறையில் பொது மக்களுக்குச் சொந்தமான காணியை கடற்படையினருக்கும் சவீகரிக்கும் நோக்கில் நேற்று நில அளவைத் திணைக்களத்தினரால் காணி அளவீடு செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந் நிலையில் மக்களின் காணிகளை கடற்படையினருக்கு சுவீகரிக்கும் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து காணி உரிமையாளர்களும் அப் பகுதி மக்களும் அரசியல்வாதிகளும் அங்கு ஒன்று திரண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தனர்.

இதன் போது அங்கு பெருமளவிலான கடற்படையினர் மற்றும் பொலிஸார் மற்றும் புலனாய்வாளர்கள் குவிக்கப்பட்டிருந்தனர். மேலும் எதிர்ப்பு நடவடிக்கையில் இடபட்டிருந்த மக்களையும் அங்கிரந்து துரத்துகின்ற செயற்பாடுகளிலும் பொலிஸார் ஈடுபட்டிருந்தனர்.

ஆயினும் காணி சுவீகரிக்கும் நடவடிக்கை நிறுத்தப்பட்டால் மாத்திரமே தாம் அங்கிரந்த விலகுவதாக மக்கள் தெரிவித்து அங்கு நின்றிருந்தனர். இவ்வாறான நிலையில் குறித்த எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொது மக்களையும் அரசியல் பிரமுகர்களையும் அதே நேரம் அங்கு செய்தி கேசரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களையும் அச்சுறுத்தும் வகையில் கடற்படையினர் மற்றும் புலனாய்வாளர்கள் புகைப்படங்களையும் காணொலிகளையும் எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனினும் பொது மக்களின் கடும் எதிர்ப்பையடுத்து கடற்படையினருக்கு காணிகளைச் சுவீகரிப்பதற்கான காணிகளை அளவீடு செய்யாமலே நில அளவைத் திணைக்களத்தினரம் திரும்ச் சென்றனர். இதனையடுத்து எதிர்ப்பு நடவடிக்கையும் கைவிடப்பட்மை குறிப்பிடத்தக்கது. 0/Post a Comment/Comments

Previous Post Next Post