சுமந்திரன் விடுத்துள்ள அழைப்பிற்கு விக்கினேஸ்வரன் பதிலடி - Yarl Voice சுமந்திரன் விடுத்துள்ள அழைப்பிற்கு விக்கினேஸ்வரன் பதிலடி - Yarl Voice

சுமந்திரன் விடுத்துள்ள அழைப்பிற்கு விக்கினேஸ்வரன் பதிலடி


தமிழ் மக்களின் பிரதிநிதிகளிடையே ஒற்றுமை என்பது மிக அவசியம் தான். ஆனால் சுமந்திரன் போன்றவர்களின் திடிர் மாற்றம் சந்தேகம் என்கிறார் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சீ.வீ. விக்கினேஸ்வர்ன்.

யாழ்.நல்லூர் கோவில் வீதியில் உள்ள அவருடைய வீட்டில் இன்று வெள்ளிக்கிழமை ஊடகவியலாளர் சந்திப்பு நடந்தது.

இதன் போது அங்கிருந்து ஊடகவியலாளர்களால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன்இ அரசாங்கத்தின் சவால் மிகுந்த ஆட்சியை எதிர் கொள்ள தமிழ் மக்களின் பிரதிநிதிகள் ஒன்றிணைய வேண்டும் என்ற அழைப்பினை விடுத்துள்ளார்.

இவ்வழைப்பு தொடர்பில் உங்களுடைய நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்று கேள்வி எழுப்பினர் இதற்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-

ராஜபக்சக்களின் சவாலான ஆட்சியை எதிர் கொள்ள நாங்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியுள்ளது. தமிழ் மக்களின் பிரதிநிதிகளிடையே ஒற்றுமை இருக்க வேண்டும் என்பது அவசியமானது என்பதை ஏற்றுக் கொள்ளுகின்றேன். 

ஆனால் கடந்த காலத்தை பார்க்கும் போது சிலர் அந்த ஒன்றுமையை உடைக்கும் வண்ணமகவும்இ அந்த கொள்கை ரீதியான ஒற்றுமைக்கு எதிரான சிந்தனையுடனும்இ செயற்பாட்டுடனும் நடந்து வந்ததை நாங்கள் பார்த்திருக்கின்றோம்.

ஆகவே அரசியல் ரீதியான தந்துரோபாயமாக இவ்வாறான ஒன்றுமை தொடர்பான கருத்துக்கள் வெளியிடப்பட்டால் அதனை நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாது.

முதலிலே தமிழ் மக்கள் மீது எமக்கு ஒரு பிடிப்பு இருக்க வேண்டும். இந்த மக்கள் மீது கரிசனை இருக்க வேண்டும். தமிழ் மக்களுக்காக நாங்கள் என்ன செய்யப் போகின்றோம்இ எப்படிச் செய்யப் போகின்றோம்.

 அதற்கான நாங்கள் ஒருமித்துஇ ஒன்றித்துஇ ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்ற அந்த எண்ணம் இயற்கையாகவே உள்ளுணர்ச்சியில் வர வேண்டும்.

ஏதோ ஒரு அரசியல் ரீதியான தந்துரோபாயமாக நாங்கள் எல்லோரும் சேர வேண்டும்இ நாங்கள் அப்படி செய்ய வேண்டும்இ இப்படி செய்ய வேண்டும் என்றெல்லாம் சொல்வதில் எந்த பயனும் இல்லை.

இதுவரை காலமும் எங்களுடைய கொள்கை ரீதியான விடயங்களை புற்கணித்துஇ அதற்கு எதிரான கருத்துக்களை தெரிவித்தவர்கள்தான சுமந்திரன் போன்றவர்கள்.

அவர்கள் திடீரென மாறுவார்கள் என்று எங்களால் சிநத்திக்க முடியாது. ஆனால் எங்ளிடையே கொள்கை ரீதியான ஒன்றுமை அவசியம் என்பதை நான் ஏற்றுக் கொள்ளுகின்றேன் என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post