கொரோனாவால் தடைப்பட்டியிருந்த யாழ் - கொழும்பு புகையிரத சேவை மீண்டும் ஆரம்பம் - Yarl Voice கொரோனாவால் தடைப்பட்டியிருந்த யாழ் - கொழும்பு புகையிரத சேவை மீண்டும் ஆரம்பம் - Yarl Voice

கொரோனாவால் தடைப்பட்டியிருந்த யாழ் - கொழும்பு புகையிரத சேவை மீண்டும் ஆரம்பம்

யாழ் - கொழும்பு  புகையிரத சேவை மீண்டும் வழமைக்கு  திரும்பியுள்ளதாக யாழ்ப்பாண புகையிரத நிலைய பிரதான புகையிரநிலைய அதிபர் ள.பிரதீபன் தெரிவித்தார்

கொரோணா காலத்தின் பின்னர் தற்போதுள்ள புகையிரதசேவை  தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறுதெரிவித்தார்

கடந்த மார்ச் மாதம் முதல் நாட்டில் ஏற்பட்ட கொரோணா  தொற்று அச்சம் காரணமாக யாழ்ப்பாணம் கொழும்பு புகையிரத சேவைகள் தடைப்பட்டிருந்த நிலையில் கடந்த மாதம் மீண்டும் புகையிரத சேவை ஆரம்பிக்கப்பட்டுருந்தது  தற்போது வழமைபோல் புகையிரத சேவைகள் இடம் பெற்று வருகின்றது என யாழ் புகையிரதநிலைய  பிரதான புகையிரத நிலையஅதிபர் பிரதீபன் தெரிவித்தார் மேலும்

தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ள  நகர்  சேர் கடுகதி புகையிரதசேவை எதிர்வரும் 29 இ30 இ31 இமற்றும் 1ம் திகதிகளில் பரீட்சார்த்தமான சேவையினை ஆரம்பிப்பதற்கு ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது

 கொரோணா காலத்தில் இடைநிறுத்தப்பட்டிருந்த குறித்த சேவையானது எதிர்வரும் 29ஆம் திகதி முதல் பரீட்சார்த்தமாக ஆரம்பிக்கப்படவுள்ளது எனவே பயணிகள் தங்களுக்குரிய முன் ஆசன பதிவுகளை யாழ் புகையிரத நிலையத்தில்  மேற்கொள்ள முடியும் என்றார்

0/Post a Comment/Comments

Previous Post Next Post