இலங்கையில் வேகமாகப் பரவும் எலிக் காய்ச்சல் - பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை - Yarl Voice இலங்கையில் வேகமாகப் பரவும் எலிக் காய்ச்சல் - பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை - Yarl Voice

இலங்கையில் வேகமாகப் பரவும் எலிக் காய்ச்சல் - பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் எலிக்காய்ச்சலினால் 4 ஆயிரத்து 554 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

அத்துடன் குறித்த காலப்பகுதிக்குள் எலிக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட 37 பேர் உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில்இ குறித்த காலப்பகுதிக்குள் எலிக்காய்ச்சலினால் அதிக அளவில் பாதிக்கப்பட்ட மாவட்டமாக இரத்தினபுரி அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதன்படிஇ இரத்தினபுரி மாவட்டத்தில் ஆயிரத்து 146 பேருக்கு எலிக்காய்ச்சல் ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த காலப்பகுதிக்குள் மொனராகலை மாவட்டத்தில் எந்தவொரு எலிக்காய்ச்சல் நோயாளியும் அடையாளம் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post