ஊடகவியியலாளர்களையும் பொது மக்களையும் அச்சுறுத்திய புலனாய்வாளர்களும் பொலிஸாரும் கடற்படையினரும் - Yarl Voice ஊடகவியியலாளர்களையும் பொது மக்களையும் அச்சுறுத்திய புலனாய்வாளர்களும் பொலிஸாரும் கடற்படையினரும் - Yarl Voice

ஊடகவியியலாளர்களையும் பொது மக்களையும் அச்சுறுத்திய புலனாய்வாளர்களும் பொலிஸாரும் கடற்படையினரும்




கடற்படைக்கு காணி சுவீகரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த பொது மக்களுக்கும் அங்கு செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியியலாளர்களுக்கும் பொலிஸாராலும் கடற்படையினராலும் புலனாய்வாளர்களாலும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. 

யாழ்ப்பாணம் வேலனை பிரதேச செயலர் பரிவிற்குட்பட்ட ம்டைதீவு Nஐ 8 கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட பகுதியில் கடற்படையினரின் மேலதிக தேவைக்காக பொது மக்களின் காணிகளை சுவீகரிக்கும் வகையில் நில அளவீடு மேற்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் குறித்த இடத்தில் பொது மக்களும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் திரண்டிருந்தனர். இந் நிலையில் அங்கு செய்தி சேகரிப்பதற்கு ஊடகவியியலாளர்களும் சென்றிருந்தனர். 

இந் நிலையில் ஏற்கனவே அங்கு குவிக்கப்பட்டிருந்த பொலிஸாரும் புலனாய்வாளர்களும் அங்கு நின்றிருந்தவர்களை புகைப்படம் வீடியோ எடுத்து அச்சுறுத்தியிருந்தனர். அதே நேரம் கடற்படை முகாமிற்குள் நின்றிருந்த கடபடையினரும் முகாமிற்குள் நின்றவாறு அங்கு நின்றிருந்தவர்களை புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர். 

இவ்வாறு அங்கு நின்ற பொது மக்கள் மற்றும் ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் வகையில் கடற்படை பொலிஸார் புலனாய்வாளர்களால் புகைப்படம் வீடியோ என்பன எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 




0/Post a Comment/Comments

Previous Post Next Post