சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினருக்கு மீளவும் கொரோனோ பரிசோதனை - Yarl Voice சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினருக்கு மீளவும் கொரோனோ பரிசோதனை - Yarl Voice

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினருக்கு மீளவும் கொரோனோ பரிசோதனை

சென்னை சேப்பாக்கத்தில் நடக்கும் பயிற்சி முகாமில் கலந்து கொள்ள வருகை தரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களுக்கு 2 முறை கொரோனா பரிசோதனை நடத்த அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் இந்த முறை ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டு விட்டது. 

அங்குள்ள துபாய்இ சார்ஜாஇ அபுதாபி ஆகிய இடங்களில் 13-வது ஐ.பி.எல். போட்டி செப்டம்பர் 19-ந்தேதி முதல் நவம்பர் 10-ந்தேதி வரை நடத்த ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. 

அதிகாரபூர்வ போட்டி அட்டவணை இன்னும் வெளியிடப்படவில்லை என்றாலும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்சும்இ முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும் மோதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த போட்டியில் பங்கேற்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அங்கம் வகிக்கும் இந்திய வீரர்களுக்கு சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் பயிற்சி முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இதையொட்டி கேப்டன் டோனி துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா ஹர்பஜன்சிங் அம்பத்தி ராயுடு ரவீந்திர ஜடேஜா என ஏறக்குறைய 15 வீரர்கள் சில தினங்களில் சென்னைக்கு வருகை தர உள்ளனர்.
 
இது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி காசிவிஸ்வநாதன் கூறுகையில்இ 'சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினருக்கு வருகிற 16-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை சென்னையில் பயிற்சி முகாம் நடத்த விரும்புகிறோம். 

இதற்காக தமிழக அரசிடம் அனுமதி கேட்டு விண்ணப்பம் அளித்துள்ளோம். அரசாங்கம் தரப்பில் வாய்மொழியாக சம்மதம் தந்து விட்டனர். இருப்பினும் இன்னும் எழுத்துப்பூர்வமான ஒப்புதல் கிடைக்கவில்லை. எழுத்துப்பூர்வ அனுமதி கிடைத்ததும் இந்திய வீரர்களுக்கு மட்டும் பயிற்சி முகாம் நடத்த திட்டமிட்டு இருக்கிறோம்.

வீரர்கள் தங்களை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டு தான் சென்னைக்கு வருவார்கள். இங்கு மேலும் இரண்டு முறை அதாவது வருகிற 17 மற்றும் 18-ந்தேதிகளில் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படும். பயிற்சி முகாம் நடந்தாலும்இ நடக்காவிட்டாலும் வருகிற 21-ந்தேதி சென்னையில் இருந்து அமீரகம் புறப்பட்டு செல்வார்கள்' என்றார்.

39 வயதான டோனி கடந்த மார்ச் மாதம் சென்னைக்கு வந்து பயிற்சியில் ஈடுபட்டார். பிறகு ஐ.பி.எல். தள்ளிப்போனதும் சொந்த ஊரான ராஞ்சிக்கு சென்று விட்டார். ஐ.பி.எல். போட்டி நடப்பது உறுதியானதும் அவர் ராஞ்சியில் உள்விளையாட்டு அரங்கில் ஒரு வாரம் பயிற்சி மேற்கொண்டதாக தெரிகிறது.

விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் இந்தியாவைச் சேர்ந்த வீரர்கள் ஓரிரு நாட்களில் பெங்களூருவில் சங்கமிக்க உள்ளனர். இவர்கள் இங்குள்ள நட்சத்திர ஓட்டலில் 7 நாட்கள் தனிமைப்படுத்தப்பட இருக்கிறார்கள். 

அதன் பிறகு 22 அல்லது 23-ந்தேதி தனி விமானத்தில் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு புறப்படுகிறார்கள். அதற்கு முன்பாக அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்படும். ராஜஸ்தான் ராயல்ஸ்இ கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியினர் ஆகஸ்டு 20-ந்தேதி புறப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மற்ற அணிகளும் 22-ந்தேதிக்குள் கிளம்ப திட்டமிட்டு உள்ளன. வெளிநாட்டு வீரர்கள் நேரடியாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு வருகை தந்து அணியுடன் இணைந்து கொள்வார்கள்.

மேலும் வலை பயிற்சியில் பயன்படுத்துவதற்கு என்று கிட்டத்தட்ட 50 வலை பயிற்சி பந்து வீச்சாளர்கள் அழைத்து செல்லப்படுகிறார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் முதல்தர மற்றும் தேசிய அளவிலான 19இ 23 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் விளையாடியவர்கள்.

'எல்லாம் சரியாக அமைந்தால் பிரத்யேகமாக 10 பவுலர்களை பயிற்சிக்கு உதவுவதற்காக அமீரகம் அழைத்துச்செல்ல திட்டமிட்டு இருக்கிறோம். அவர்கள் ஐ.பி.எல். தொடங்கும் வரை எங்கள் அணியுடன் இருப்பார்கள்' என்று சென்னை சூப்பர் கிங்சின் தலைமை செயல் அதிகாரி காசிவிஸ்வநாதன் குறிப்பிட்டார். கொல்கத்தா அணி நிர்வாகமும் 10 வலை பயிற்சி பவுலர்களை தயார் படுத்தி வைத்திருப்பதாக கூறியுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post