அமெரிக்காவில் அடங்காத கொரோனா - பாதிப்பு 53 இலட்சத்தை தாண்டியது - Yarl Voice அமெரிக்காவில் அடங்காத கொரோனா - பாதிப்பு 53 இலட்சத்தை தாண்டியது - Yarl Voice

அமெரிக்காவில் அடங்காத கொரோனா - பாதிப்பு 53 இலட்சத்தை தாண்டியது

அமெரிக்காவில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 53 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 215 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில்இ அமெரிக்காவில் ஒரே நாளில் மீண்டும் 50 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 53 லட்சத்தைக் கடந்துள்ளது.

ஒரே நாளில் 1இ280க்கும் அதிகமானோர் பலியானதை தொடர்ந்து அங்கு கொரோனாவுக்கு சிக்கி பலியானோர் எண்ணிக்கை 1.67 லட்சத்தை தாண்டியுள்ளது. கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 27 லட்சத்தை கடந்துள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post