யாழில் இடம்பெற்ற விநோதச் சம்பவம் - பொலிஸாரால் பாதிக்கப்பட்டவரின் மனைவி மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு - Yarl Voice யாழில் இடம்பெற்ற விநோதச் சம்பவம் - பொலிஸாரால் பாதிக்கப்பட்டவரின் மனைவி மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு - Yarl Voice

யாழில் இடம்பெற்ற விநோதச் சம்பவம் - பொலிஸாரால் பாதிக்கப்பட்டவரின் மனைவி மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

முச்சக்கர வண்டியில் பயணித்த பொலிஸ் உத்தியோகத்தர் பயணிப்பதற்கான பணத்தினை கொடுக்காது முரண்பட்டு விட்டு தன்னை தாக்கியதாக தனது கணவனை கைது செய்து தடுத்து வைத்துள்ளதாக பாதிக்கப்பட்டவரின் மனைவி மனித உரிமைகள் ஆனைக்குமுவில் நேற்று முறையிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது..

யாழ் நகரப் பகுதியில் நேற்று காலை  முச்சக்கர வண்டியில் பயணித்த சிவில் உடையில் இருந்த போலீசார் முச்சக்கர வண்டி சாரதி தன்னை தாக்கியதாக தெரிவித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தார்.

இதனையடுத்து சிவில் உடையில் நின்ற போலீசாரை தாக்கிய குற்றச்சாட்டில் முச்சக்கர வண்டி சாரதி யாழ்ப்பாணம் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.இந்நிலையில் கைது செய்யப்பட்ட முச்சக்கரவண்டி சாரதியின் மனைவி யாழ்ப்பாணம் மனித உரிமை ஆணைக்குழுவில் தனது கணவன் பொலிசாரால் திட்டமிட்டு பழிவாங்கும் பட்டுள்ளதாக முறையிட்டுள்ளார்.

முச்சக்கர வண்டியில் பயணித்தமைக்கான பணத்தினைக் கேட்டபோது முரண்பட்டு விட்டு தன்னை தாக்கியதாக பொய்யான முறைப்பாட்டை பதிவு செய்து தனது கணவனை கைது செய்து தடுத்து வைத்துள்ளனர் என்று முறையிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




0/Post a Comment/Comments

Previous Post Next Post