வரணியில் இளைஞனைக் கடத்தி வாள்வெட்டு! ஆபத்தான நிலையில் வைத்திய சாலையில் அனுமதி!! - Yarl Voice வரணியில் இளைஞனைக் கடத்தி வாள்வெட்டு! ஆபத்தான நிலையில் வைத்திய சாலையில் அனுமதி!! - Yarl Voice

வரணியில் இளைஞனைக் கடத்தி வாள்வெட்டு! ஆபத்தான நிலையில் வைத்திய சாலையில் அனுமதி!!

யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் இளைஞரொருவரைக கடத்தி அவர் மீது வாள் வெட்டுத் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

வடமராட்சி வரணி பகுதியில் இன்று மாலை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது..

வேலைக்கு சென்றுவிட்டு பேருந்தில் வந்து சுட்டிபுரம் பகுதியில் இறங்கும் போது அங்கு நின்றிருந்த இனந்தெரியாத கும்பல் ஒன்று குறித்த இளைஞனை கடத்திச் சென்று வாளால் வெட்டி படுகாயப்படுத்தி விட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

இதன் போது காயமடைந்த இளைஞன் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இச் சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செந்யப்பட்டுள்ளது. இதனையடுத்து சம்பவம் தொடர்பில் மேலதிக வுசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post