ராஐபக்ச தரப்பினால் ஏமாற்றப்பட்டாரா அங்கஐன்? கடும் அதிருப்தியில் ஆதரவாளர்கள் - Yarl Voice ராஐபக்ச தரப்பினால் ஏமாற்றப்பட்டாரா அங்கஐன்? கடும் அதிருப்தியில் ஆதரவாளர்கள் - Yarl Voice

ராஐபக்ச தரப்பினால் ஏமாற்றப்பட்டாரா அங்கஐன்? கடும் அதிருப்தியில் ஆதரவாளர்கள்


பாராளுமன்ற உறுப்பினர் அங்கஐன் இராமநாதனுக்கு எந்தவிதமான அமைச்சுப்பதவிகளும் வழங்கப்படாதமை தொடர்பில் பலரும் அதிருப்தி வெளியிட்டு வருகின்றனர்.

நடைபெற்ற பாரர்ளுமன்றத் தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் யாழ் மாவட்டத்தில் போட்டியிட்டு அதி கூடிய விருப்பு வாக்குகளால் அங்கஐன் வெற்றி பெற்றிருந்தார்.

இவ்வாறு அங்கஐனுடைய வெற்றியினூடாக கடந்த பல வருடங்களின் பின்னர் சுதந்திரக் கட்சி யாழ்ப்பாணத்தில் வெற்றி பெற்றிருக்கின்றது.

இந்த வெற்றி வரலாற்று வெற்றி என்று தெரிவித்திருந்த அக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஐனாதிபதியுமுhன மைத்திரிபால சிறிசேன தமிழ் மக்களுக்கு தனது நன்றியையும் தெரிவித்திருந்தார்.

இதே வேளை நடைபெற்ற தேர்தலில் பொதுஐன பெரமுனவுடன் சிறிலங்கா சுதந்திரக் கட்சி கூட்டமைத்து ஒன்றாகப் போட்டியிட்டிருந்தது. அதே நேரத்தில் யாழில் தனித்துப் போட்டியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆயினும் தேர்தல் முடிவடைந்த பின்னர் அமைச்சர்கள் நியமனத்தின் போது சுதந்திரக் கட்சியின் தலைவர் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்களுக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவில்லை. 

பெரமுனவின் இத்தகைய செயற்பாடுகள் சுதந்திரக் கட்சியினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கின்றது. எனினும் அக் கட்சியின் சில உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டிருக்கின்றதும் குறிப்பிடத்தக்கது. 

மேலும் சுதந்திரக் கட்சியின் சார்பில் யாழில் வெற்றி பெற்றிருந்த அங்கஐன் இராமநாதனுக்கு அமைச்சர் பதவி அல்லது பிரதி அமைச்சர் அல்லது இராஐhங்க அமைச்சர் பதவியாவது வழங்கப்படுமென்று அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்திருந்தனர். 

ஆனால் அவருக்கு எந்தவித அமைச்சுப் பதவிகளும் வழங்கப்படவில்லை. அதே நேரத்தில் யாழ் மாவட்ட அபிவிருத்திக் குழுவிண் தலைவர் பதவி வழங்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. 

0/Post a Comment/Comments

Previous Post Next Post