மாவை குறித்து வருத்தம் - கள்ளவாக்கு தொடர்பில் எச்சரிக்கை - சுமந்திரன் அறிவிப்பு - Yarl Voice மாவை குறித்து வருத்தம் - கள்ளவாக்கு தொடர்பில் எச்சரிக்கை - சுமந்திரன் அறிவிப்பு - Yarl Voice

மாவை குறித்து வருத்தம் - கள்ளவாக்கு தொடர்பில் எச்சரிக்கை - சுமந்திரன் அறிவிப்பு


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான சுமந்திரன் மனம் திறந்து பல விடயங்களை தெளிவுபடுத்தியிருக்கின்றார். 

குறிப்பாக மாவை சேனாதிராசா விடயத்தில் வருத்தம் வெளியிட்டுள்ள அவர் தன்மீதான குற்றச்சாட்டுக்களுக்கு எச்சரிக்கையும் சவாலும் விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் ஆதரவாளர்களைச் சந்தித்துக் கலந்துரையாடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன் போது அவர் மேலும் தெரிவித்ததாவது..

என்னை அரசியலுக்கு கூட்டி வந்தவர் மாவை சேனாதிராசா தான். அவருக்கு எதிராக நான் செயற்படுவாதாகவே அவரது தலைமையை மாற்ற வேண்டுமென்று நாம் கோருவதாகவே வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை. 

வெறுமனெ எனக்கு எதிராக கட்சியினர் செய்த சதி நடவடிக்கைகள் தொடர்பில் நான் அவரிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதே எனது குற்றச்சாட்டாக இருக்கிறது. 

மேலும் தலைவர் பதவியை மாற்ற வேண்டுமென்று சிறிதரனும் கோரவில்லை. நானும் அதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் ஊடகங்கள் அப்படியான செய்திகளைப் பரிசுரித்தமை தான் இப்போது பல கேள்விகளை யும் சந்தேகங்களையும் வரிசல்களையும் ஏற்படுத்துகிறது.

 அவ்வாறான செய்திகளினால் மாவை சேனாதிராசாவிற்கு மன உளைச்சல் ஏற்பட்டிருந்தால் அதற்காக நாங்கள் வருந்துகிறோம். 

மேலும் கடந்த தேர்தலில் கள்ள வாக்கு என்று பலரும் பேசுகின்றனர். னோல் அப்படி ஏதும் நடைபெறவும் நடைபெற சாத்தியமும் இல்லை. 

ஆகையினால் இனிமேலும் அப்படி யாரேனுமு; சொல்வார்களாக இருந்தால் அதற்காக சட்ட நடவடிக்கை எடுக்க தயாராக இருக்கிறேன்.

அத்தோடு அவ்வாறு சொல்பவர்கள் துணிவிருந்தால் சட்ட நடவடிக்கைக்கு செல்லலாம். அதனை விடுத்து மறைமுகமாக சொல்ல முயலக் கூடாது. 

ஆனாலும் அதைக் குறித்து இனிமேலும் யாராவது பேசுவார்களாக இருந்தால் கட்டாயம் சட்ட நடவடிக்கை எடுப்பென் என்றும் எச்சரித்துள்ளார். 

0/Post a Comment/Comments

Previous Post Next Post