முன்னணி அலுவலகத்துக்குச் சென்ற போது வெளியேற்றப்பட்ட மணிவண்ணண் - ஊடக சந்திப்பும் ரத்து - Yarl Voice முன்னணி அலுவலகத்துக்குச் சென்ற போது வெளியேற்றப்பட்ட மணிவண்ணண் - ஊடக சந்திப்பும் ரத்து - Yarl Voice

முன்னணி அலுவலகத்துக்குச் சென்ற போது வெளியேற்றப்பட்ட மணிவண்ணண் - ஊடக சந்திப்பும் ரத்து

யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னனின் தலைமை செயலகத்திற்கு ஊடக சந்திப்பு நடாத்த சென்ற மணிவண்ணன் மற்றும் ஆதரவாளர்கள் வலுகட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளராக இருந்த மணிவண்ணன் தனது அரசியல் நிலைப்பாடு தொடர்பில் இன்று கட்சி அலுவலகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தார்.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொள்வதற்காக மணிவண்ணனின் ஆதரவாளர்கள் கட்சி அலுவலகத்துக்கு வந்திருந்த போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் மணிவண்ணனின் ஆதரவாளர்களை வெளியேற்றியதுடன் கட்சி அலுவலகம் மூடப்பட்டது இதனால் மணிவண்ணனின் ஆதரவாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

அங்கிருந்து சென்ற ஆதரவாளர்கள்  மணிவண்ணனின் அலுவலகத்திற்கு முன்பாக ஆதரவாளர்கள் ஒன்று கூடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post