யாழ் போதனா வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சினால் டிஜிற்றல் ஸ்கானர் இயந்திரம் வழங்கி வைப்பு - Yarl Voice யாழ் போதனா வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சினால் டிஜிற்றல் ஸ்கானர் இயந்திரம் வழங்கி வைப்பு - Yarl Voice

யாழ் போதனா வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சினால் டிஜிற்றல் ஸ்கானர் இயந்திரம் வழங்கி வைப்பு

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு 160 மில்லியன் ரூபா பெறுமதியான டிஜிர்ரல் சிசி ஸ்கேனர் சுகாதார அமைச்சினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள  டிஜிட்டல் ஸ்கேனர் தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் சி.யமுநானந்தா  கருத்து தெரிவிக்கையில்

யாழ் போதனா வைத்திய சாலைக்கு  சுகாதார அமைச்சினால் டிஜிட்டல் சிசி ஸ்கேனர் இன்றைய தினம் உத்தியோகபூர்வமாககையளிக்கப்பட்டுள்ளது 

இது சுமார் 160 மில்லியன் ரூபா பெறுமதியானஇயந்திரம்  இது இலங்கையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மட்டும் தற்போது காணப்படுகின்றது
 அடுத்ததாக தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டுள்ளது 

இதன் மூலம்  நோயாளிகளில் சில நோய்களை  இலகுவாக இனங்கண்டு கொள்ள கூடியதாக இருக்கும் குருதிக் கலன்களின்  நாடி நாளங்களில் அடைப்பு ஏற்படும்போது இந்த கருவி மூலம் இலகுவாக கண்டறியக் கூடியதாக இருக்கும் இதற்குரிய தகுதி வாய்ந்த வைத்திய ஆளணியினரும் அமைச்சினால்  நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

 இதன் மூலம் சிறுநீரகத்திற்கு செல்லக்கூடிய கலங்களில் ஏற்படும் மாற்றம்  மற்றும் மூளைக்கு செல்லும் கலங்கள்இஇதயத்தில் ஏற்படுகின்ற அடைப்புகளை இலகுவாக கண்டறியக் கூடியதாக இருக்கின்றது இந்த இயந்திரம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டது வடக்கு மக்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக அமைகின்றது என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post