தேர்தல் தோல்வியினால் பதவி விலகுவதாக சத்தியலிங்கம் அறிவிப்பு - Yarl Voice தேர்தல் தோல்வியினால் பதவி விலகுவதாக சத்தியலிங்கம் அறிவிப்பு - Yarl Voice

தேர்தல் தோல்வியினால் பதவி விலகுவதாக சத்தியலிங்கம் அறிவிப்பு


வவுனியா மாவட்டத்தில் தமிழ் அரசுக் கட்சிக்கு ஏற்பட்ட தேர்தல் பின்னடைவிற்கு தார்கமீக பொறுப்பேற்று மாவட்ட கிளைத் தலைவர் பதவியில் இருந்து மருத்துவர் ப.சத்தியலிங்கம் பதவி விலகினார்.

நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் அரசுக் கட்சி வவுனியா மாவட்டத்தில் கணிசமான வாக்குகளைப் பெற்றபோதும் எதிர் பார்த்த வெற்றியினை பெறத் தவறிவிட்டது. எனவே இவ் விடயத்திற்கு அடுத்தவரை நோக்கி விரலை நீட்டவோ அல்லது காரணங்களை அடுக்கவோ விரும்பவில்லை. எனது ஒரே நோக்கம் தமிழர்களும் தமிழ் அரசும் வெற்றியீட்ட வேண்டும் என்பதே ஆகும்.

இந்த இலக்கினை மாவட்டத்தில் அடைவதற்கு மாஙட்டத் தலமையே முழுப் பொறுப்பாகும். அதன் பால் நானே மாவட்டத் தலைவராக செயல்படும் காலத்திலேயே 2020ஆம் ஆண்டிற்கான நாடாளுமன்றத் தேர்தல் இடம்பெற்றது . இந்த தேர்தலில் வவுனியா மாவட்டத்தில் தமிழ் அரசுக் கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவிற்காக மனம் வருந்துகின்றேன்.

இந்த பின்னடைவிற்கு தனியே வருத்தம் தெரிவித்து தப்பவும் விரும்பாத காரணத்தினாலும் தலைவர் எந்த நெருக்கடியிலும் வெற்றியை பெற்றிருக்க வேண்டும் உன்பதன் அடிப்படையில் எனது மாவட்டத் தலைவர் பதவியை இராஜினாமாச் செய்கின்றேன். இந்த முடிவினை நான் மாவட்ட கிளையில் தெரிவித்து விட்டேட். இதேபோல் கட்சியின் தலமைக்கும் விரைவில் எழுத்து மூலம் அறிவிப்பேன்.

எனது பதவி விலகலை ஏற்று இன்னும் துடிப்பான இளகஞனை நியமித்து கட்சியை முன்கொண்டு செல்ல வேண்டும். அதற்கு நானும் தொண்டனாக இருந்து உழைப்பேன். என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post