கூட்டமைப்பின் தேசியப் பட்டியலை தமக்கும் வழங்குமாறு ரெலோ கோரிக்கை - Yarl Voice கூட்டமைப்பின் தேசியப் பட்டியலை தமக்கும் வழங்குமாறு ரெலோ கோரிக்கை - Yarl Voice

கூட்டமைப்பின் தேசியப் பட்டியலை தமக்கும் வழங்குமாறு ரெலோ கோரிக்கை


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்புறுமையை இறுதி இரண்டரை ஆண்டுகளிற்கு தமது கட்சிக்கு தர வேண்டும் என கோரிக்கை முன் வைப்பதாக ரெலோவின் மத்திய குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ரெலோவின் மத்திய குழுக் கூட்டம் நேற்றைய தினம் திருகோணமலையில் இடம்பெற்றது இதன்போதே குறித்த தீர்மானத்தை எட்டியுள்ளனர்.

ரெலோவின் மேற்படி தீர்மானம் தொடர்பில் கூட்டமைப்பின் தலைவரிற்கு அறிவிப்பதோடு 20ஆம் திகதிய நாடாளுமன்றக் குழுக் கூட்டத்திலும் பிரஸ்தாபிக்க வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கூட்டமைப்பிற்கு கிடைத்த ஒரேயொரு ஆசணத்தை பெண் பிரதிநிதி இ கிழக்கு மாகாண பிரதிநிதி அல்லது தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் என சர்ச்சை எழுந்த நிலையில் தற்போது ரெலோவும் தமது பங்கிற்கு ஓர் புதிய விடயத்தை முன் வைத்துள்ளமையும் குறி்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post