எங்களது விருப்பங்கள் உங்களுக்கு கொதிப்பை ஏற்படுத்துகிறதென்றால் எங்களை எங்கள் வழியில் செல்ல விடுங்கள் - சிவாஜிலிங்கம் பதிலடி - Yarl Voice எங்களது விருப்பங்கள் உங்களுக்கு கொதிப்பை ஏற்படுத்துகிறதென்றால் எங்களை எங்கள் வழியில் செல்ல விடுங்கள் - சிவாஜிலிங்கம் பதிலடி - Yarl Voice

எங்களது விருப்பங்கள் உங்களுக்கு கொதிப்பை ஏற்படுத்துகிறதென்றால் எங்களை எங்கள் வழியில் செல்ல விடுங்கள் - சிவாஜிலிங்கம் பதிலடி

தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி. வி. விக்னேஸ்வரனின் உரையை நாடாளுமன்றப் பதிவேட்டிலிருந்து நீக்கினால் சர்வதேச சமூகத்திடம் முறையிடுவோமென வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் இன்று தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர் நாடாளுமன்ற முதல்நாள் அமர்வில் விக்னேஸ்வரன்  ஆற்றிய உரை சிங்கள - பௌத்த பேரினவாதிகளைக் கொதித்தெழ வைத்துள்ளதென்றார்.

தங்களுடைய வரலாற்றை தங்களுடைய விருப்பங்களை தாம் தெரிவிப்பது அவர்களுக்கக் கொதிப்பை ஏற்படுத்துகிறதென்றால் தங்களை விட்டுவிடுங்களெனத் தெரிவித்த அவர் நீங்கள் உங்களுடைய பாட்டிலே செல்லுங்களெனவும் தாங்கள் தங்களுடைய வழிகளைப் பார்த்துக் கொள்கின்றோமெனவும் என எண்ணத் தோன்றுகின்றதென்றார்.

தமிழ் மொழியும் ஒரு மொழி என்று அங்கிகரிக்கப்பட்டப் பின்னர் தமிழ் மொழியில் உரையாற்றியதையடுத்து கூக்குரலிடுவதும் நாடாளுமன்றப் பதிவேட்டில் இருந்து உரையயை நீக்குவதை பரிசீலிப்பதாக சபாநாயகர் கூறுவதும் ஜனநாயக முறைக்கு விரோதமான ஒரு செயற்பாடாகவே தான் கருதுவதாகவும்இ சிவாஜிலிங்கம் கூறினார்.

'அவ்வாறு இதை நீக்கினால் நாங்கள் சர்வதேச நாடாளுமன்ற ஒன்றியத்திடமும் சர்வதேச சமூகத்திடமும் முறையிடுவோம்' என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post