மாலியில் இரனுவம் சிறைபிடித்துள்ள ஐனாதிபதி பிரதமரை விடுவிக்க வேண்டும் - ஐ.நா வலியுறுத்து - Yarl Voice மாலியில் இரனுவம் சிறைபிடித்துள்ள ஐனாதிபதி பிரதமரை விடுவிக்க வேண்டும் - ஐ.நா வலியுறுத்து - Yarl Voice

மாலியில் இரனுவம் சிறைபிடித்துள்ள ஐனாதிபதி பிரதமரை விடுவிக்க வேண்டும் - ஐ.நா வலியுறுத்து

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மாலியில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக அரசுக்கு எதிராக மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்த நிலையில் ராணுவமும் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக மாறியது.

நேற்று தலைநகர் பமோகோவில் ராணுவ டாங்கிகள் வலம் வந்த நிலையில்இ ராணுவ புரட்சி வெடித்ததாக அறிவிக்கப்பட்டது. 

இதையடுத்து பிரதமர் பவ்பவ் சிஸ்சே ராணுவத்துடன் பேச்சுவார்த்தைக்கு அழைத்தும் பலன் அளிக்கப்பவில்லை. 

தொடர்ந்து ஜனாதிபதி இப்ராகிம் பவுபக்கர் கெய்டா மற்றும் பிரதமர் பவ்பவ் சிஸ்சே ஆகியோர் கைது செய்யப்பட்டதாக ராணுவ கிளர்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.

இதனிடையே மாலியில் கைது செய்யப்பட்ட பிரதமர் மற்றும் அதிபரை உடனடியாக கிளர்ச்சியாளர்கள் விடுதலை செய்ய வேண்டும் என ஐ.நா. பொதுச்செயலாளர் ஆண்டோனியோ குட்டாரஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனேியோ குட்டரஸ் செய்தி தொடர்பாளர் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

அதில்இ  மாலியில் ஏற்பட்டுள்ள சூழ்நிலையை ஐ.நா. உன்னிப்பாக கவனித்து வருகிறது. முதலில் ஜனாதிபதிஇ இப்ராஹிம் பவுபக்கர் கெய்டாவை எந்த நிபந்தனையுமின்றி விடுதலை செய்ய வேண்டும். 

அங்கு மீண்டும் அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் சட்டம்இ ஒழுங்கு பாதுகாக்கப்பட வேண்டும்' எனஇ அறிக்கையில் அவர் கூறினார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post