அமெரிக்க அதிபர் தேர்தலிற்கான ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு - Yarl Voice அமெரிக்க அதிபர் தேர்தலிற்கான ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு - Yarl Voice

அமெரிக்க அதிபர் தேர்தலிற்கான ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக ஜோ பிடேன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்காவில் வரும் நவம்பர் 3ம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறுகிறது. இதில் குடியரசுக் கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்இ மீண்டும் போட்டியிடுகிறார். 

ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பிடன் ஜனாதிபதி பதவிக்கும்இ இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் துணை ஜனாதிபதி பதவிக்கும் போட்டியிடுகின்றனர்.

இதற்கிடையே ஜனநாயக கட்சியின் வேட்பாளரை அதிகாரபூர்வமாக தேர்வு செய்யும் கட்சி மாநாடுஇ ஆன்லைன் மூலம் நடைபெற்றது. 

இதில் ஜோ பிடன் அதிகாரபூர்வ வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த மாநாட்டில் பேசிய அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவின் மனைவிஇ மிச்சேல் ஒபாமாஇ டிரம்பை மிகக் கடுமையாக விமர்சித்தார்.

மாநாட்டின் முடிவில் அமெரிக்க தேர்தலுக்கான ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட ஜோ பிடேனைஇ ஜனநாயக கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து ஜோ பிடேன் தனது டுவிட்டரில்இ 'அமெரிக்காவின் ஜனாதிபதிக்கான ஜனநாயகக் கட்சியின் பரிந்துரையை ஏற்றுக்கொள்வது எனது வாழ்க்கைக்கு கிடைத்த மிகப்பெரிய மரியாதை' என்று பதிவிட்டுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post