விக்கினேஸ்வரன் கயேந்திரகுமார் குறித்து செல்வம் அடைக்கலநாதன் அதிரடி அறிவிப்பு - Yarl Voice விக்கினேஸ்வரன் கயேந்திரகுமார் குறித்து செல்வம் அடைக்கலநாதன் அதிரடி அறிவிப்பு - Yarl Voice

விக்கினேஸ்வரன் கயேந்திரகுமார் குறித்து செல்வம் அடைக்கலநாதன் அதிரடி அறிவிப்பு


தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து தமிழ் மக்களின் பலமாக அனைவரும் ஒன்றாக இணைந்து செயற்பட வேண்டியது அவசியம் என கூட்டமைப்பின் முக்கியஸ்தரும் ரெலோ அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

நடைபெற்று மடிந்த பாராளுமன்றத் தேர்தல் நிலைமைகள் குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது..

தமிழ் மக்களின் எதிர்கால நலன்களுக்காக தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்தும் இணைந்து பயணிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. 

இதற்கமையவே விக்கினேஸ்வரன் மற்றும் கயேந்திரகுமார் ஆகியொரை இணைந்து பயணிக்க வருமாறு சுமந்திரன் அழைப்பு விடுத்திருந்தார்.

அந்த அழைப்பிற்கமைய தமிழ் மக்களின் ஒற்றுமை அவசியமென்றும் கொள்கையடிப்படையில் இணைந்து பயணிக்க தயார் என்றும் விக்கினேஸ்வரன் அறிவித்திருக்கின்றார். 

அவரது இந்த அறிவிப்பை நாங்கள் வரவேற்றுக் கொள்கிறோம். அதே 
போன்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கயேந்திரகுமார் பொன்னம்பலமும் வர வேண்டுமென்று அழைக்கின்றோம். 

இது தொடர்பில் கயேந்திரகுமார் மற்றும் விக்கினேஸ்வரன் ஆகியோருடன் விரைவில் நாங்கள் பேச்சு நடாத்துவோம் என செல்வம் அடைக்கலநாதன மேலும் தெரிவித்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post